cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

அகராதி கவிதைகள்

அகராதி
Written by அகராதி

ரும மிளிர்வு
சுடும் குருதி
வாடா முகம் வளையும் யாக்கை
யாவும்
தேய்ந்து அழிந்து போகவிட்ட
வழக்கமான
அழுத்தத்தில்
உணர்வுகளைப்
புரட்டிக் கொண்டு
அழத் தயாராய் இருக்கும் கணங்களில் உடைப்பில்லை

இருண்டு இறுகச் செய்யும்
வலியை
ஆராய்ந்தே ஒரு வாழ்வு
முடிந்து கொள்கிறது

பொய் களைந்து
உண்மைத் தழுவி
நற் குறியேற்று நயம்பட
திரு முழுக்காட்டி
நிறைந்து
படிந்து
காலங்காலமான
கரிமமாக
விழியோரத் துளி
மிளிரும் நாளெண்ணியே
கரைந்து தொலையும் மனதைக் கையாள்வதெப்படி


ழைக்காலப் பின்னிரவில்
ஈரமாகியிருந்த இருளை
உலர்த்திக் கொண்டிருந்த நிலா
தனித்திருக்கும்
அடுக்ககங்கள் விடும்
உஷ்ண மூச்சினை
எதிர் கொள்ள இயலாமல் வியர்த்திருந்தது

பக்கத்துக் கட்டிடத்தின்
பலகணி கூண்டிலிருந்து
கீச்சொலி
காற்று நிரம்பிய போத்தலை
ஆறாத கூழாங்கற்கள் கொண்டு நிரப்பிக் கொண்டிருந்தேன்
ஆளரவமற்ற வாசலில்
காவலாளியின் சீழ்க்கையொலி


டுடைத்து வெளிவந்த
சிறு பறவை
பிளந்த வாயின் இளஞ்
செந்நிறமாக நுனி சிவந்து
கனிந்து தவித்த பொழுது,
காமத்தின் நிழலில்
தஞ்சமடையாது
பறந்துவிட்ட
இரவின் எச்சமென
பகலில் முளை விடுகிறது


கவிதைகள் வாசித்த குரல்:
 அகராதி

Listen On Spotify :

 

 

About the author

அகராதி

அகராதி

திருச்சியை சார்ந்தவர். இவரின் இயற்பெயர் கவிதா. தமிழிலக்கிய பட்டதாரியான இவர் ”அகராதி” எனும் புனைபெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெட்கச் சலனம் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதை, கவிதைப் படைப்புகள் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website