தெருமுனை
டீக்கடையில்
கையேந்தியபடி
நிற்கும் முதுமைக்கு
என் அப்பத்தாவின்
சாயல்…!
ஒரு கைலிக்குள்
முடங்கி விடுகிறது
நடைபாதை வாசிகளின்
வாழ்க்கை.
அத்தனை
பெண்களுக்கு மத்தியில்
ஒற்றை நபராய் அமர்ந்திருக்கும்
ஆண்
கூச்சங்களால்
நிரம்பியிருக்கிறான்
ஷேர் ஆட்டோவில்…