cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 29 கவிதைகள்

பௌத்த வெளிச்சத்தின் மழை!


அ) மீண்டும் மீண்டும் நிகழ்கிறது மரணம்.
சலிப்பில்லாத மரணம்,
கசந்துபோகாத
காமத்தைப் போல.

ஆ) சுழலும் சலூன் நாற்காலியின் காதுகளுக்கு
கதைகள் கேட்கும் வரம் அளித்தவர் யார்?
ஒற்றை காது இழந்த வான்காவின் இதயத் துடிப்பில்
மொசார்ட்-ன் இசைக் கோர்வை.

இ) தவளையை விழுங்கும் கணத்திற்காக
துருத்திய பிளவு நாக்கொடு அரவம் அலைந்தபடி
நீரில் ஒரு வாழ்வு அல்லது ஒரு கனவு நிகழ்கிறது.

ஈ) பூக்கள் பறிக்கப்பட்ட செடிகளிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அல்லது பிக்குகள் தங்கள் வசம் வைத்திருக்கும் மழி கத்திகளைக் கொண்டு
எனது மயிர்களை மழித்துக் கொள்ள வேண்டும்.
தண்டனைகள் எனப்பவை அவரவர் மனசாட்சியை உலுக்குவன.

உ) சரணாகதி அடைகிறேன் அத்தனை தவறுகளிடமும்.
தமிழ்ப் பிக்குவின் நிழல் நடந்த பாதையெங்கும் அமைதியின் நறுமணம்

ஊ) கானகவெளியெங்கும் அமைதி, கடலினமைதி!
பெருங்காற்றெழுந்து அடங்கிய பின்.
பெளத்த வெளிச்சத்தின் மழை.


 

About the author

இலட்சுமண பிரகாசம்

இலட்சுமண பிரகாசம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website