cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

தாரிகை கவிதைகள்

தாரிகை
Written by தாரிகை

  • வெறும் மயிர்.

முட்டி மோதி தான் ஒரு ஆண் என
கர்வம் கொண்டு வெளிவரும்
என் மீசை மயிரை

உன் பாதம் முழுவதும்
தூரிகையாய் கொண்டு வருடிக்கொள்
அவை வெறும் மயிர்தான் என
தெரிந்துகொள்ளட்டும்.

நீ விரும்பும்போது
உன் உடல் முழுவதும்
தூரிகையாய் வருடட்டும்.

உன்னை காயப்படுத்தும்போது
அவை கொலை செய்யப்படட்டும்
ஏனெனில், அதுவெறும் மயிர்தான்.

உன் பற்களினால்
ஒவ்வொரு மயிரையும்
எளிதாக பிடுங்க முடியும்
வீரமோ
ஆண்மையோ
மானமோ அவற்றில் இல்லை
ஏனெனில் அவை வெறும் மயிர் மட்டுமே!


  • உன்னை காதலிக்கிறேன்.

ற்றில் பிடிக்கும் மீனை போல
அவ்வவபோது நழுவிக்கொண்டே
போகிறது வார்த்தைகள்.

புழுவை கொண்டு தூண்டிலில்
பிடிக்க முயற்சிக்கும் மீனை போல
யோசனைகளை கொண்டு அவனுக்கான
வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

குளத்தில் மீன்களுக்காக காத்திருக்கும்
கொக்கை போல
தக்க சமயத்தை எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறேன் அவனிடம் கூற

இறுதியில் வண்டியில் விற்பனை செய்பவரிடம்
வாங்கும் மீனை போல
‘உன்னை காதலிக்கிறேன்’ என்று மட்டும்
சாதாரணமாக சொல்லிவிட்டேன்!


  •  களவாடிய காற்று

வ்வொரு முறை கண்ணாடி பார்க்கும்போதும்
முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்

அது கண்ணாடிக்கான முத்தமா
இல்லை கண்ணாடியில் தெரியும்
என் பிம்பத்திற்கான முத்தமா
அல்லது எனக்கான முத்தமா என
தெரியவில்லை

இப்படி குழப்பியிருக்கையில்
எனக்கும் கண்ணாடிக்குமான
இடைவெளியில் முத்தத்தை
யாருக்கும் தெரியாமல்
களவாடி சென்றது காற்று!


About the author

தாரிகை

தாரிகை

தாரிகை எனும் பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் ரஞ்சிதா ரவி. பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவர். இளம் வயதிலேயே மாணவ பத்திரிக்கையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர், 6 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார். பெண்ணியம், தலித் அரசியல் மற்றும் தலித் இலக்கியச் சூழலில் இயங்கி வருபவர். சமூகம், அரசியல், உடல்நலம், உறவுகள், பெண்கள் மற்றும் தலித் அரசியல் குறித்தும் எழுதிக் கொண்டிருப்பவர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website