- சாலை எறும்புகள்
“சாலைக்கு பலியென
பீடத்தில் வாளேந்தி நிற்கிறது
வடக்கே போகும் கனரக லாரி
கனமற்ற தலைகளுக்கு ஏதுவான
கவசம் விழும்வரை ஏனோ
சிக்குவதில்லை
சீறிபாய்ந்தவன் மல்லாந்து கிடக்க
உனக்கென்ன? எனக்கென்ன?
என்று அசட்டை செய்கிறது தார்ச்சாலை
சுற்றி நிற்பவர்களின் பார்வைக்கு
எறும்பு நசுங்குவதைப்
போல்தான் இருந்தது
அந்த லாரியும் ஒருவேளை
அவனை
அப்படி நினைத்திருக்கலாம்”
- குழந்தை நட்சத்திரங்கள்
“நீலப்படம் எடுப்பவனைப் போல
நிலவின் ஒற்றை விளக்கொளியில்
கீழிருந்து உற்று நோக்குபவனின் கண்களுக்கு
தன்னை தாராளமாய் திறந்துக்காட்டுகிறது வான்
புழுக்கத்தில் புரண்டு படுத்தவனின் விரல்கள்
எதேச்சையாகவே அவள் மீது உரசியிருக்கும்
அதற்காக நடைமேடையில்
பார்ப்பவர்கள் கூசும் அளவிற்கா
இருவரும் சத்தமாக நட்சத்திரங்களை எண்ணுவார்கள்?”