உதிரந்தது இறகுதான்
பறத்தலின் திசையில்
தடங்கல் நிலைப்பதில்லை
வானத்தின் நீள அகலத்தில்
எப்போதும் நிலைகொள்ளாத
முயற்சியின் போக்கில்
தொலைப்பதில்லை தேடலை.
புயலின் நிமித்தமும்
காற்றின் வலைவீச்சும்
மாற்றும் திசையில்
மாறிப் போவதில்லை
இறகின் வழிகள்.
***
உங்களின் வசதிக்காகவும்
வற்புறுத்தலுக்காகவும்
எனது அமைதியின் எல்லையை
திறந்து காட்டச் சொல்கிறீர்கள்
வன்மமும் சினமும்
வதங்கிப் போகாமல்
குருதி குடிக்கக் காத்திருக்கும்
இந்த நெஞ்சில்தான்
உங்களின் முன்னால்
ஆட்டம் காட்டாமல் அடங்கி நிற்கிறது
எனது சிரிப்பின் எல்லை.
வாருங்கள்
உங்களின் வார்த்தைகளுக்கேற்ப
எனக்கான ஆயுதங்களைத்
தேடத் துவங்கலாம்.