கவியெழுதவைக்கும் .
“ம்”
காமத்தால் திளைக்க வைக்கும்.
“ம்”
மதிமயங்கவைக்கும்.
“ம்”
மண்ணாகப் போகவைக்கும்.
“ம்”
சில நேரங்களில் கடவுளாக்கிப்
பார்க்கவைக்கும்
“ம்”
பைத்தியமாய் ஓடவைக்கும்
“ம்”
கண்ணீராய் மாற்றி வைக்கும்
“ம்”
கணீரென்று சிரிக்க வைக்கும்
“ம்”
முட்டாளாய் ஆக்கி நிற்கும்
“ம்”
அவ்வண்ணமே பெருகிய விதிகளிடம் மனிதன் பணிந்தான்
“ம்”
வணங்கி எழுந்தான்
“ம்”
கடவுளின் சூத்திரங்களைக்கண்டுகொண்டான்.
“ம்”
கடவுளைப் போல சிலையாக்கினான்
“ம்”
நிஜக் கடவுளை சாலையோரத்தில் நிற்க வைத்தான்
“ம்”
அதன்பின்
கடவுள் நாடோடியானான்
மனிதன் அதிகாரமானான்.
“ம்”
நான் என்ன கதையா சொல்றேன்?
“ம்”
அருகருகே தொடர்கிறது
நம் பயணம்.
மவுன ஓட்டத்தில்
சுகமான நினைவுகளோடு
தண்டவாளங்களின் மீது.
உடைந்தவளையல் துண்டுகள்
உரையாடல்களைக் குலுக்க
மனமுப்பட்டகத்தில் திரண்டன
புதிய அர்த்தங்கள்.
“பசிக்குதடா” என்ற கெஞ்சலில்
எட்டிப்பார்த்தது உள்ளொருக் குழந்தை
உன்னிடம்.
அறிந்து ஊட்டிய கைகளிலிருந்து
வழிகிறது கடவுளின் மனிதம்.
சொல் செல்வமே
யார் நீ?