நாளைய விடியலில்
என் குரல்
எல்லை கடந்திருக்கலாம்,
பனியுறும் பூமியில்
சப்பாத்துக்களை கால்களில்
திணித்தபடி
பனிக்கட்டிகளை அள்ளிக்கொண்டிருப்பேன் உன்நினைவாய்.
என் பகல்கள்
உன்னருகில் இரவுகளாய்
சபிக்கபட்ட நிலத்தில்
உன் வார்த்தைகளை சுவைக்க
நான் தேடவேண்டியிருக்கும்
விடுமுறை நாட்களை
அடகு வைத்த
அம்மாவின் தாலிக்கொடி
அமுதாவுக்கென்றொரு
ஸ்கூட்டி வாகனம்
வட்டிக்கு வாங்கிய
ஒருகோடி ரொக்கப்பணம்
இவற்றையெல்லாம் கட்டிமுடிப்பதற்குள் காணாமல் போயிருக்கக்கூடும்
நம் இளமையின் அலங்காரங்கள்
அதுவரைக்கும்
பத்திரமாயிருக்கட்டும்
தெருமுனை வரைக்கும்
நீளும் மணல் வீதியில் பதிந்துகிடக்கும்
நம் காலடித்தடங்கள்.