cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 3 கவிதைகள்

நரேன் கெளரி கவிதைகள்


ரு உரையாடல்
தொடர்கிற போது பெற்றவள் கடக்கையில்
மௌனமாய் இருக்கச் சொன்னாய்.
மென்று விழுங்கா தவிப்பொன்றில்
மொத்த காதல் குவித்து
நீ பூவெனக் கவிழ்ந்திருந்த அக்கணத்தில்
மலர்ந்திருந்ததை
நானறிகிறேன்.

கண்கள் இறுக மூடச்சொல்லிக் கண்டிக்கிறாய்
கவிழ்கிறேன் துளி
மீளா ஷணமொன்றில்,
நமுட்டுச்சிரிப்புடன்
வெட்கங்களைக் கூடச் சேர்த்திக் கொண்டு
இயல்பு மீறி நீ தந்த முத்தங்களை இறுக மூடியிருந்த என் கண்களுக்கு விருந்தாக்கியிருந்தாய் ..

எனக்கேதும் அறியா வண்ணம்
நீ நிகழ்த்திய அம்மாயப் பெருங்கூற்று நானுமறிவேன்,

அனேகப் பொழுதுகளில் நீயொப்புக்கொள்ளா
மறுப்புகளில் பொதிந்திருக்கிறேன்
உனக்கு ஏற்கும்
காதற் சூனியக்காரன் ..

ஞானச்செறுக்கின்
தன்மையில் நீயுன்னை தொலைக்கா பொழுதுகளிலும்
மொத்தமும் விற்றிருக்கிறாய் என்னிடமுன்னை ….
இவ்வாகபெரும் சரணாகதிக்குள்
நீயென் ஆழியும்
அது உயிர்ப்பிக்கும்
பேரலையுமாகிறாய்.

நீ விழுங்கும்
நதியாகிக் கிடக்கிறேன் நான் …
உன்னைப்போலவே
நானும் பெரும் பைத்தியக்காரன் …
மீட்டெடுத்து உயிர் தங்கச் செய்யும் பெருந்தாய் நீயெனக்கு..!


ஞாபகப்பெருமழை
கிளறும் காதற் சேற்றில்
சிக்கித் திணறும்
மணித்தியாலங்களில்
நல்மீட்பியுமாகி ரட்சிக்கும்
ஆயிரங் காதலுடையாள்
காதற் கண்மணி
மலரடி ஒற்றி சேவித்தினிற்கும்
காதல் ஆழ்வார் நானாகிறேன்
என்தாண்டாற் கோதை நாயகித்துணையே …

றுக்கத்திற்குப்
பின்னும்
நீ மலர்ந்து
கிடக்கும் இத்தவம்
கலைத்த மேனகனாகிருக்கிறேன்
உன்னில்
தொலையச்
சாபமிட்டுச் சிலையாக்கி
என்னை பின்னுமொரு இரவில்
ஆட்கொளள்ளேன்

ப்ரியம்பகா..!


Art Courtesy  : wattpad.com


About the author

நரேன் கெளரி

நரேன் கெளரி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website