1
கையிருப்பை எண்ணாமல்
கணக்காய் வாங்குவாள்
கடைகளில் பொருள்கள்.
ஆண்டுகள் பலவாகியும்
அவனது நல்லது கெட்டதுகளை
மறக்காமல் ஒப்பிப்பாள்.
பிறந்த நாள் தொடங்கி
பட்டம் பெற்ற நாள்வரை
கிழமைகூட சேர்த்துச் சொல்வாள்.
உணவின் சுவை தொடங்கி
உடுக்கும் ஆடை வரை
எல்லோரது விருப்பத்தையும்
நினைவில் வைத்திருப்பவளுக்கு
எப்போது தான் பிறந்தோம்
என்பது தெரியாதென்பாள்.
தனக்கான நேற்றையும்
தொலைத்துவிட்டு
எதிர்காலத்தைத் தேடியபடி
மகனிடம் கெஞ்சுகிறாள்
வீட்டுக்கு அழைத்துப் போவென
முதியோர் இல்ல வாசலில் நின்றபடி.
***
2
சிற்பத்திற்கான வடிவமென
சில மணித்துளிகள்
நிற்க முடிகிறது நிர்வாணமாக.
ஓயாதழும் பிள்ளைக்கு
ஒதுங்கமுடியாப் பொது இடத்தில்
பாலூட்ட முடிகிறது தாயென.
நெரிசல் பேருந்துக்குள்
பிறாண்டும் விரலின் தீண்டலைத் தாண்டி
புதைகுழியில் விழாது
நகர்த்துகிறாள் நாளையை.
வானை முட்ட உயரும்
கட்டிட உச்சிக்கு
தலைச்சுமையென ஏறிப்போகையில்
மொய்க்கும் வக்கிரங்களைக்
கடந்துவிடுகிறாள் கடமையென
சக உயிரெனக் காணாது
பாலியல் தொல்லைக்குள்
புதைத்துவிடும் ஆண்களைத்
தாண்ட முடியாமல்
புலம்பித் திரிகிறாள்
பாரதத்தாயின் புதல்வி.
சில மணித்துளிகள்
நிற்க முடிகிறது நிர்வாணமாக.
ஓயாதழும் பிள்ளைக்கு
ஒதுங்கமுடியாப் பொது இடத்தில்
பாலூட்ட முடிகிறது தாயென.
நெரிசல் பேருந்துக்குள்
பிறாண்டும் விரலின் தீண்டலைத் தாண்டி
புதைகுழியில் விழாது
நகர்த்துகிறாள் நாளையை.
வானை முட்ட உயரும்
கட்டிட உச்சிக்கு
தலைச்சுமையென ஏறிப்போகையில்
மொய்க்கும் வக்கிரங்களைக்
கடந்துவிடுகிறாள் கடமையென
சக உயிரெனக் காணாது
பாலியல் தொல்லைக்குள்
புதைத்துவிடும் ஆண்களைத்
தாண்ட முடியாமல்
புலம்பித் திரிகிறாள்
பாரதத்தாயின் புதல்வி.
கவிதைகள் வாசித்த குரல்:
இளையவன் சிவா
Listen On Spotify :