காலை எழுந்தவுடன்
உங்களுக்காக
ஒரு இனிமையான, நல்லதிர்வுகளை எழுப்பும்
படமொன்றைத் தேடித் தேடிக் கண்டடைகிறார்கள்.
அதில்
காலை வணக்கத்தைப் பதிவு செய்கிறார்கள்
நட்பிலுள்ள அத்தனை ஆயிரம் மனிதர்களில்
உங்களைத் தேடி அடைகிறார்கள்
மிகுந்த அன்புடன் உங்களுக்கு அனுப்புகிறார்கள்
நீங்கள் வெறுமனே கடந்து போகிறீர்கள்
என்றாவது
விரும்பியோ, விருப்பமில்லாமலோ
அந்த அன்பை நீங்கள் பிரதிபலிக்கையில்
அவர்கள் அத்தனை சந்தோஷமடைகிறார்கள்.
ஒரு பதில் வணக்கம் சொல்லக் கூட
நேரமில்லாத உங்களை நன்கறிந்த அவர்கள்
நீங்கள் பிரதிபலித்தாலும், பிரதிபலிக்காவிட்டாலும்
மறநாள் காலை எழுந்தவுடன்
உங்களுக்காக
ஒரு இனிமையான நல்லதிர்வுகளை எழுப்பும்
படமொன்றைத் தேடித் தேடிக் கண்டடைகிறார்கள்.
அதில்
காலை வணக்கத்தைப் பதிவு செய்கிறார்கள்
நட்பிலுள்ள அத்தனை ஆயிரம் மனிதர்களில்
உங்களைத் தேடி அடைகிறார்கள்
மிகுந்த அன்புடன் உங்களுக்கு அனுப்புகிறார்கள்.