- குரல் பாதை
நினைத்துக்கொள்ளும் தருணங்களிலிருந்து
தப்புகிற வலிக்கு
நுழைத்துக் கொண்ட மலையின்
வழி
களைத்து வருகிறது
ஒரு பெரும் குரல்
எதிரொலி
எதிர்பட
சுமக்கும்
காற்றுக்குள்
தட்டுப்படுகிறது
உன் அசைவுக்கு
இசையா மௌனம்
- மரி
மூளை மடிப்பின் முனை மடங்க
பழுப்பேறியிருக்கிறது
உன் பாத்திரம்
யாசகா
ஒரு மந்திரமென
என்னை உச்சரி
வரம் தர
வளர்க்கிற
காளியின் உரு
என் பிச்சை
பொருள் சேர் பிறப்பில்
நழுவும் துளிக்குள்
வதம் செய்ய
இடுகிறேன்
ஒரு சொல்லை
கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :