தடுத்தாட்டும் நெருடல்கள்.
ஆகப்பெரும் வெளியில்
பயணப்பட்டு வந்த பிறகு.
தென்பட்ட பூமியில்.
அநேக ஆச்சரியங்கள்
இருந்தது.
இவ்வளவு நேர்த்தியான கிரகத்தை
இதற்குமுன் கண்டதில்லை.
மேலிருந்து
கீழ் நோக்கிய பார்வைக்
கிட்டினால்.
இவ் வழ்க்கை இரசித்தலின் பொருட்டாக.
நீங்களும் சொர்க்கவாதிதான்.
இத்தனை மதுரமாக நீர்ப்பிரவாகம். சூழ்ந்து
கொட்டும்
அருவிக்காக. குன்றுகளெனும் மலைகள். மாபெரும் மலைப்புதான் பூமியில்.
பல்லுயிரிகளின் வாழ்வின் பாந்தம்
வழி தவறி வந்துவிட்டது.
சரியெனத்தான்
சந்தோசம் பூத்தது.
உண்ணலின் சுழற்சியே பேரதிசயமென
வியக்கும்
வேலையில்.
யாரது…
இறைவனையொத்த
இப்படியான ஒன்றிருப்பதாக
சொல்லப்பட்டு
இருப்பது.
இதுவெனக்கண்டு
யுகப் பயணத்தை
தொடராமல்
வந்த
வழியே
சென்றே ஆகவேண்டிய
சங்கடத்தில்
இருக்கின்றேன்.
தவறிழைக்காதவன்
என்ற
கூற்றைச் சொன்னவனை
சற்றே
மீளாய்வுக்கு
உட்படுத்திக்கொள்ளச் சொல்லவேண்டும்.
எனக்கு
நேரப்போகும்
சங்கடங்கள்
எதுவாக
இருந்தாலும்.
இந்நெடும் பயணத்தின்
புறமுதுகோட்டத்தில்.
பாந்தப் புரிதல்.
அசௌகரிய
மிகைப்பின்
பாடுகளில்.
வாட்டும்
தருணங்கள்.
கடக்க
அற்ப காரணங்கள்
போதும்.
சகித்தலின்
வாஞ்சையில்
ஊறும்
கரிசன அன்பு.
இத்தனைக்
காத்திரமான
கருனையாக.
பொங்கிப் பிரவாகமெடுக்காமல்
இருந்தால்.
நானும்
சொல்லிவிடலாம்தான்.
யாவரையும் போல.
அடப்
போங்கடாவெனப்
பொறுப்புகளற்று.
https://open.spotify.com/episode/5AnvL4GxJ4lBMj8PlIMHPR?si=e36f1691569d491e