காரணம்
ஓடியே ஆக வேண்டும்
என்ற நிர்பந்தமே
களைப்பைத் தருகிறது.
விண்மீன்களை ஓடாக்கி
கூரையிழந்த வீட்டை
மாளிகையாக்கலாம்;
தேன் வேட்டைக்கு
பட்டாம்பூச்சியை
துணையாக்கலாம்.
உலகத் திரையில்
தினமொரு நாடகம் அரங்கேறுமெனில்
இடைவேளைக்காக இடைவெளி கோரும்
காதலின்
இறுதிக்கட்டதைகப் பார்க்கப் பார்க்க
துண்டிக்கப்பட்ட மின்சாரத்தின் மீது
ஏன் இத்துணை ஆதங்கம் !
எவர் தூக்கத்திற்கும் ஊறு விளைவிக்காமல்
ஓடும் அர்த்த ஜாம எண்ண இரயில்களின்
கடைசி பெட்டி வாசகம்
“கால்கள் இல்லா விடினும்
ஓட்டம் உண்டு”
நீ
பூமிக்கு பாரமில்லாமல்
உலவித் திரியும் ஆன்மாவின்
அகோரப் பசிக்கு தீனியாகும் – உன் நினைவுகள்;
உருண்டு ஓடும் காலச்சக்கரத்திற்கு
போக்குவரத்துத் துறை இட்ட வேகத்தடையாய்
நீ வந்ததால் – மெல்ல நகர்ந்த நாட்களை ,
வேகமாய் கடந்து
வெளியேறவே நினைக்கிறது மனம்.
பட்டாம்பூச்சிகள் நிறைந்திருந்த
ரோஜா தோட்டத்தில்
பனித்துளி எல்லாம் தேன் தானே;
பனி பொழியும் பகல்,
சுட்டெரிக்கும் இரவு
என உலகம் தலைகீழாக மாறியிருக்கவில்லை.
உள்ளது உள்ளபடியே இருந்தது.
நான், என்னைக் காணும் கண்ணடியானாய் நீ எனக்கு.
சிந்தியது,
ஒரு சொட்டு விழி நீர்.
எறும்புக்குழிக்கு வெள்ளம் தானே.
இப்பொழுது, ஆன்மாவை ஆசுவாசப்படுத்த
அருவியின் அடிவாரத்தில்
தியானம் செய்ய யத்தனிக்கிறேன்.
சலனம் சிறிதும் இன்றி
கலைத்து விட்டுப் போகிறது
நினைவேட்டில் பதிந்த நின் குரல்.
Ungal kural inimaiyaaga irukindradhu🤩😉..kavithai padika romba arumaiyaaga irukindradhu uyir thozhiye 🥰🔥💯 innum neengal idhu pola neraiya kavithaigal pagiravum😊😁 olimayamaana edhirkaalam ungaluku kaathukondu irukindradhu🤩🤗
Aazhamana matrum amaithiyana varigal..makes me to think a lot.
Rendu kavithayum super ah iruku .. unga kural la keka innum inimaya iruku.. neenga innum neraya kavithai podanum..
அந்தக் குரல் கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது 😇
Aarumaiyana varikal ❤️
Wow that’s amazing…. You’re voice is like a warm hug
Really superb…. Unique and top notch.. Vocal too jus awsome 👌👌👌
Anto Jones
Really superb….. I didn’t expect this, top notch…. Keep it up go high 👌👌👌👌
Keka enimaiya ullathu ungal voice,nalla eruku kavithai ❤️☺️☺️ 💥nice one..