காலில் ஊரும் எறும்புகளைத் தட்டி விடுகிறேன்
அவை கைகளில் ஊர்கின்றன
கைகளில் ஊரும் எறும்புகளைத் தட்டி விடுகிறேன்
அவை கண்களில் ஊர்கின்றன
கண்களில் ஊரும் எறும்புகளைத் தட்டி விடுகிறேன்
அவை கடலில் ஊர்கின்றன
கடலில் ஊரும் எறும்புகளைத் தட்டி விடுகிறேன்
அவை காட்டில் ஊர்கின்றன
காட்டில் ஊரும் எறும்புகளைத் தட்டி விடுகிறேன்
அவை மலையில் ஊர்கின்றன
மலையில் ஊரும் எறும்புகளைத் தட்டி விடுகிறேன்
அவை நிலவில் ஊர்கின்ற்ன
நிலவில் ஊரும் எறும்புகள்
நினைவில் ஊர்ந்து
நினைவில் ஊரும் எறும்புகள்
கனவில் ஊர்ந்து
கனவில் ஊர்ந்த எறும்புகள்
உங்கள் உடலில் ஊர்வதை
நான்
நிலவிலிருந்து பார்க்கிறேன்
நீங்கள் அதைத் தட்டிவிடத் தேவையில்லை
அது உங்களைக் கடிக்காதவரை
நீங்கள்
அதை
தட்டிவிடத் தேவையில்லை