தழைந்து விழுகிற மயில்கழுத்துப் பட்டுப் புடவை
பந்து குண்டுமல்லி
காற்றில் பரவும் வாசனைத் திரவியம்
பச்சை நரம்பினோரம் நெகிழ்கிற கண்ணாடி வளையல்கள்
வட்டச் சிவப்பில் பொலிகிற
நெற்றிக் குங்குமம்
தாக்கு தாக்கென்று துரித அடிகள் வைத்து
தினம் காலை 8.45க்கு பரமேஸ்வரி டீச்சர்
பள்ளிக்குக் கிளம்பிப் போவது போலத்தானிருந்தது
பல்லக்கு தெருமுக்குத் திரும்பும்வரை.
அழகு