அங்கொரு மரம் உண்டு ,பகற்பொழுதில்,
அதற்கு,இரவு வேளையில்
நிழலுண்டு,
ஒரு கரிய பெரிய கரம்,
நீண்ட கரிய விரல்களுடன்.
முற்றும் இருளின் ஊடாக
வெள்ளைக்காரனின் வீட்டுக்கு
எதிரில்,
சிறிய காற்றின் போது,
அந்த கரிய கரம் பறிக்கிறது மேலும் பறிக்கிறது
செங்கற்களை
செங்கற்கள்
இரத்த வண்ணத்திலும்
மிகச் சிறியவையாயும் இருக்கின்றன
அது ஒரு கரிய கரமா
அல்லது நிழல்தானா
தமிழில் : மலர்விழி
ஏஞ்சலினா வெல்ட் கிரிம்கே, பிப்ரவரி 27, 1880 இல் பாஸ்டனில் பிறந்தார், ஹார்லெம் மறுமலர்ச்சியில் பணியாற்றிய ஒரு பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். அவரது கவிதைகளான தி ஐஸ் ஆஃப் மை ரெக்ரெட், அட் ஏப்ரல், ட்ரீஸ் மற்றும் தி க்ளோசிங் டோர் ஆகியவற்றிற்காக அவர் மிகவும் பிரபலமானார். நீக்ரோ கவிஞர்கள் மற்றும் அவர்களின் கவிதைகள் (தி அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ், 1923) மற்றும் தி நியூ நீக்ரோ (அத்தேனியம், 1925) உள்ளிட்ட பல ஹார்லெம் மறுமலர்ச்சித் தொகுப்புகளில் அவரது படைப்புகள் சேகரிக்கப்பட்டன. அவர் ஜூன் 10, 1958 இல் இறந்தார்.