காதல்
ஓர் அதிசய தீபகற்பம்
ஒருபுறத்தில் நீ
முப்புறத்தில் கண்ணீர்!
***
நீ மதுவா ?
இல்லை
மதுவின் தாகமா ?
***
காதல்
எனக்கு இமையாக இருக்கிறது
மரணத்தின் போதும்
அஃது என்னை அணைத்துக் கொள்ளும்.
***
உலகம் ஒரு சிறை
அதிலிருந்து விடுபடுவதற்கு
காதலை
விலங்கிட்டுக் கொள்கிறேன்.
***
நீ எரிக்கிறாய்
நான் எரிகிறேன்
விளக்கில் விழும்
விட்டிலின் விதி என் காதல்.