cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 32 கவிதைகள்

குமரகுரு கவிதைகள்


விளையாத நிலங்களுக்கு மேலே
பறக்கும் பறவைகளின் நினைவில்
விளைந்த காலத்து தானியங்கள்
விதைகளாக மாறுகின்றன!

******

பாடைக்கு
தென்னமரக்கீற்றோலைகளைப் பின்னும் அவன் விரல்களின்
வேகம் பார்த்ததும்
நினைவில் இறந்தவனின் விரல்கள்
கீபோர்டில் டைப் செய்வது
நினைவில் வந்து போகிறது…

******

பாஸ்வேர்டுகளை மறந்துவிடுகிறார்
பின்களை மறந்துவிடுகிறார்
எழுதிக் கொடுத்தும் பார்த்துவிட்டேன்
நோட்டைத் தொலைத்து விடுகிறார்.
ஆனால், தூரத்து பெரியப்பாவின்
ஒன்னு விட்ட சித்தப்பா பையனின்
பெயரை மட்டும் தூக்கத்தில் கேட்டாலும் சரியாக சொல்கிறார் அம்மா!

******

குற்றவாளியின் மூலம் நிகழ்த்தப்பட்ட
குற்றத்தின் பின்னணியில்
நகர்ந்து கொண்டிருந்தது வஞ்சம்
யாராவதொருவருக்கு செய்யப்படும்
சிறு துரோகம்
தன் கிரியாவூக்கியில்
வேறொருவரை இழுத்து
கழுத்தறுத்துப் போட்டுவிடுகிறது.

*****

கதைகளை சுமந்தபடி அலையும்
நபர்களிடம் எத்தனை நோய்கள்?
மருத்துவமனைகளாய் மாறிய வீடுகளில்தான் எத்தனை மருத்துவர்கள்?
மருந்துகள்தான் உணவு என்றும்
உணவுதான் மருந்து என்றும்
எத்தனை சண்டைகள்!!

உணவை மருந்தாக்கிக் கொண்டு வாழ்பவர்களே!
மருந்துக்கும் உணவில்லாதவர்களுக்குதான்
உணவே மருந்து!!


 

About the author

குமரகுரு

குமரகுரு

சென்னையிலுள்ள ஐ.டி துறை நிறுவனமொன்றில் பணிபுரியும் குமரகுருவின் கவிதைத் தொகுப்புகள் இதுவரை தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website