பேசவோ, பார்க்கவோ,
நினைக்கவே நினைக்கவோ
கூடாதென்ற கட்டளைகள்
பரவித் திரிகிற வெளியில்
கடவுச் சீட்டற்ற மேகங்கள்
அழையாமல் நுழையும் காற்று
பெரிய கோட்டைக் கதவுகள்
தவற விடும் இடைவெளியில்
பொசிந்து விடுகிற நீர்
போன்ற அந்த அன்போ
உறுதியாக வேர்களை
ஆரவாரமின்றி கிளைபரப்பியபடி
ஆடும் இலைகளும் மலர்களும்
முகத்தில் உரசியபடி இருக்க
சாய்ந்து கொண்டிருக்கிறது
புன்னகைத்தபடி.
அதன் நினைவுகளில்
ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு நிலாவென
நினைத்துக் கொண்ட
சிறுபிள்ளை நினைவுகளை
தண்ணென்ற இருப்பில்
மௌனமாய்த் தகர்க்கிற
எல்லோருக்குமான ஒரு நிலா
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
வளர்பிறையென…