cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 கவிதைகள்

வீம்பு


அப்பட்டமான ஒரு பொய்யை
அறுபது முறை உச்சரிக்கிறாய்
உனக்கு தெரியாதா………
நான் பலவீனமானவளென்று
எதற்கும் ஒரு எல்லை உண்டு
மீறி மீறி பேசும் உன் வரம்பை
எப்படி எதிர்கொள்ளஇடப்புறம் இன்டிகேட்டரை
ஒளிறவிட்டு
வலப்புறத்தில் திரும்பி
கலவரமாற்றுகிறவளின்
மனநிலை எப்படி புரியுமுனக்கு.இல்லவே இல்லையென்று
ஏகத்துக்கும் பொய்யளக்கிறாய் ?
நீரலையில் எழுந்து வளைந்து
உடையும் விளிம்புகளைபோல
அவ்வப்போது
விழுந்து உடைகிறது
விழியின் கணைகள்
உனக்கான காத்திருப்பில்

தெரிவிப்பதிலென்ன தயக்கம்
தீகுளிப்பவன்கூட
திரும்பும் நொடியில் முடிவெடுக்கிறான் நீயோ …
இரும்புபிடியாய் இழுத்தடிக்கிறாய்
போ… போ …

இதே நிலை நீடிக்காது
என்றாவது ஒரு நாள்
ஒரு முக்கிய திருப்பத்தில் இன்டிகேட்டருக்கு பதிலாக
இரண்டு விரலசைப்பில்
அனாயாசமாய் அடித்து தள்ளி
முந்திக்கொண்டிருப்பேன்

அப்போது உன் அங்கலாய்ப்பின் அழுத்தம் தாளாமல்
அடியேயென
ஆத்திரங்கொண்டு
திட்டும் திமிர்மொழியில்
திகட்டத்திகட்ட சொல்லுவாய்
உன்னை காதலிக்கிறேனென்று.


கவிதைகள் வாசித்த குரல்:
கா.வெங்கடேஸ்வரன்
Listen On Spotify :

About the author

கா. வெங்கடேஸ்வரன் .

கா. வெங்கடேஸ்வரன் .

,
வேலூர் மாவட்டம் - குடியாத்தம் நகராட்சியைச் சார்ந்த இவர்புகைப்படக்கலைஞராக தொழில் செய்கிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ”சொல்விழுங்கும் பறவை” 2022 இல் வெளியானது. படைப்பு குழுமத்தின் விருது உட்பட சில விருதுகளை கவிதைகளுக்காக பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website