நினைவில் இருந்து
சந்திப்புகளைத் தீட்ட முயற்சிக்கிறாள்
எவ்வளவு முயன்றும்
உருவம் கூடி வரவில்லை
அவன் வருவதாய்ச் சொன்னதற்கும்
அவன் வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில்
மனம் கொள்ளும்
சொல்லொணா அழகமைதியை
எந்தத் தைல வண்ணத்தில் வடிப்பது அவள்?
பயணத்தில் ஒரு முறை
குதிக்கும் பெருந் கற்களாய் மழை பொழிய
கண்ணாடி எங்கும் நீர்த் திரை விரைந்து நழுவ
வீடுகளில்லா விரிசாலையில்
விக்கித்து நின்ற பேருந்தெங்கும்
நிறை மௌனம்.
வேண்டுமானால் அதைக் கொண்டு அவள்
வண்ணம் தீட்டிக் கொள்வாளாயிருக்கும்.
Subscribe
0 Comments