cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள் மொழிபெயர்ப்புகள்

அபுனி, நீ வீட்டில் இருக்கிறாயா?

மிருணா
Written by மிருணா

இறுகப் பூட்டிய கதவுகளோடு, துயிலும் அண்டை வீட்டவர்

நான் மட்டுமே இரவில் அடிக்கடி தட்டப்படும் ஒலியைக் கேட்கிறேன்,

‘அபுனி, நீ வீட்டில் இருக்கிறாயா?’

 

இங்கு ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது

இங்கு கர்ப்பமுற்ற பசுக்களைப் போல மேகங்கள் மேய்கின்றன

பகையுணர்வோடு கதவை அழுத்தும் பசிய மூங்கில் போன்ற புல்

வீட்டை சூழ்ந்திருப்பதைக் காண முடிகிறது 

‘அபுனி, நீ வீட்டில் இருக்கிறாயா?’

 

அரைத் தூக்கத்திலிருக்கும் என் இதயத்தோடு,

தொலைவான, ஆழமான ஒரு வலியைப் போர்த்தியபடி நான் கண்

அயர்கிறேன்

திடீரென அந்த பழைய இரவுத் தட்டல் ஒலியை நான் கேட்கிறேன்

‘அபுனி, நீ வீட்டில் இருக்கிறாயா?’ 


– மூல மொழி: வங்காளம் : ஷக்தி சட்டோபத்யாய்

 ஆங்கிலம் வழி தமிழில் : மிருணா.

 

ஷக்தி சட்டோபத்யாய் (1933 – 1995): வங்கக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், மற்றும் உரைநடை ஆசிரியர். வங்கக் கவிதைகளுக்கு புதிய வண்ணம் கொடுத்த அவரது எழுத்துலகு மிகுபுனைவு, அன்பு, மரணம், இயற்கை, கிராமம் குறித்த கருப்பொருட்களைக் கொண்டிருந்தது. Jete Pari Kintu Keno Jabo என்ற தொகுப்பிற்காக சாகித்ய அகாடெமி விருதை 1983-ல் பெற்றுள்ளார்.

About the author

மிருணா

மிருணா

கோவில்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்ட மிருணா, முதுகலை ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியம் படித்தவர். வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் உள்ள இவரது எழுத்துக்கள் ஆய்விதழ்களிலும், சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Selvam kumar

மிகவும் அருமையான கவிதை கேள்வி ஆழமான பதிவு ….

You cannot copy content of this Website