Share :
Nutpam -Podcast
Nutpam -Podcast
க.மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் மூன்று கவிதைகள்
Loading
/

இக் கணத்தில் நான் நினைப்பது…
 ராபர்ட்டோ ஜுவாரோஸ் 

நான் நினைக்கிறேன்
இக்கணத்தில்
இப் பிரபஞ்சத்தில்
யார் ஒருவருமே
என்னைப் பற்றி நினைக்காமலிருக்கலாம் ,
நானொருவன் மாத்திரமே
என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன, தவிரவும்
நானிப்போது இறந்துபோனால்
யாரும்
ஏன் நானும்கூட,
என்னைப் பற்றி
நினைக்கப் போவதில்லை.
இந்த இடத்திலிருந்துதான்
அந்த பாதாளம் தொடங்குகிறது.
நான் உறங்கத் தொடங்குகையில்,
எனக்கு ஆதாரமாக இருக்கும்
என் நினைவையும்கூட,
நான் என்னிடமிருந்து அகற்றிவிடுகிறேன்.
இல்லாமையின் திரைகொண்டு
எல்லாவற்றையும் மூடுவதற்கு உதவுகிறேன்.
அதனால்தானோ என்னவோ
யாராவது ஒருவரை நீங்கள்
நினைவுபடுத்திக்கொள்ளும்போது
அது
அவர்களை மீட்டெடுப்பது போலாகிறது.


விரும்பி அழுக்காக்கிக்கொள்வோரும் உள்ளனர்.
 கேரி ஸ்னைடர் 

தம்மை அழுக்காக்கிக் கொண்டு
விவகாரங்களை சரிசெய்கிறவர்கள் இருக்கிறார்கள்
அவர்கள்
விடியற் காலையில் காபியும்
வேலை முடிவில் பீரும்
அருந்துகிறார்கள்.
எப்போதும் தம்மை தூய்மையாக வைத்துக்கொள்வோரும் உள்ளனர்
விஷயங்களை வெறுமனே பாராட்டும் அவர்கள் ,
காலை உணவிற்குப் பிறகு பாலும்
இரவில் பழரசமும் அருந்துவார்கள்.
இரண்டையும் செய்பவர்கள் இருக்கிறார்கள்
அவர்கள் எப்போதும்
தேநீர் குடிக்கிறார்கள்.


ஈடேற்றம்
 சார்லஸ் புக்கோவ்ஸ்கி 

வான்கோ
தனது காதை அறுத்து
விலை பெண்னொருத்தியிடம் கொடுக்க ,
அவளோ
அளவிறந்த அருவருப்போடு
அதைத் தூர எறிகிறாள் .
வான் ,
விலை பெண்டிர்
காதுகளை விரும்புவதில்லை ;
அவர்கள்
வேண்டுவது
பணத்தை .
நிறைய விஷயங்களை
நீ புரிந்துகொள்ளவில்லை
என்றே எண்ணுகிறேன் .
அதனால்தான்
அவ்வளவு பெரிய ஒவியனாக உன்னால்
ஆக முடிந்தது.


கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்

கவிஞர்கள் குறித்து :
  • ராபர்டோ ஜுரோஸ் (Roberto Juarroz), (5 அக்டோபர் 1925 – 31 மார்ச் 1995) அவரது “Poesía vertical” (Vertical poetry) மூலம் பிரபலமான ஒரு அர்ஜென்டினா கவிஞர் . அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தெற்கு கடற்கரையில் உள்ள கொரோனல் டோரெகோ பார்டிடோ இவரின் பிறப்பிடமாகும்.

Read more about Roberto Juarroz on Wikipedia.

  • கேரி ஸ்னைடர் (Gary Snyder) ,(பிறப்பு மே 8, 1930, சான் பிரான்சிஸ்கோ , கலிபோர்னியா, யு.எஸ்.), அமெரிக்கக் கவிஞர் பீட் இயக்கத்துடன் (Beat movement -American literary and social movement) ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டார் , மேலும் 1960களின் பிற்பகுதியிலிருந்து, வகுப்புவாத வாழ்க்கை மற்றும் சூழலியல் குறித்தான முக்கிய செய்தித் தொடர்பாளர் செயல்பட்டார். . ஸ்னைடர் 1975 இல் கவிதைக்கான புலிட்சர் ( Pulitzer Prize) பரிசைப் பெற்றார்.

Read more about Gary Snyder on Britannica.com

  • சார்லஸ் புகோவ்ஸ்கி (Charles Bukowski), (ஆகஸ்ட் 16, 1920 – மார்ச் 9, 1994) ஒரு அமெரிக்க கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஜெர்மனியில் பிறந்த புகோவ்ஸ்கி தனது இரண்டு வயதில் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டார். தனது கவிதை மற்றும் உரைநடையை நகர்ப்புற வாழ்க்கையின் சீரழிவு மற்றும் அமெரிக்க சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை சித்தரிக்க பயன்படுத்தினார்.

Read more about Charles Bukowski on on Wikipedia.

Listen on Spotify : 

Author :

க.மோகனரங்கன்
க.மோகனரங்கன்
தீவிர வாசகர்களுக்கு பரிச்சயமான இலக்கியஆளுமை க.மோகனரங்கன் அவர்கள். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வருகிறார். இது வரை பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
சுஜய் ரகு

கவிஞரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பவன் நான் ….சொற்களிடம் அவருக்கும் இருக்கும் நெருக்கம் வியக்கத்தக்கது 🌷🌷🌷