cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 26 மொழிபெயர்ப்புகள்

ஆசை – ஆலிஸ் வாக்கர்

மிருணா
Written by மிருணா

என் ஆசை

எப்போதும் ஒரே போல  இருக்கிறது

வாழ்வு என்னைக்  கொண்டு சேர்க்கிற எந்தவொரு  இடத்திலும்:

என் கால் விரல்களையும்

பின் விரைவில் என் முழு உடலையும்

நீரினுள் அமிழ்த்த விரும்புகிறேன். 

ஒரு தடித்த விளக்குமாற்றை உதறித் தட்டி,

உலர்ந்த இலைகள் 

வதங்கிய மலர்கள் 

மரித்த பூச்சிகள்

மற்றும் தூசியைப் பெருக்க விரும்புகிறேன். 

நான் ஏதாகிலும் ஒன்றை

வளர்க்க விரும்புகிறேன்

ஆசை சில வேளை அர்ப்பணிப்பாக உருமாறுமென்பது 

சாத்தியமற்றதாகத் தென்படுகிறது

ஆனால் அது நடந்திருக்கிறது. 

மேலும் நான் அப்படித்தான் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன்:

அப்படித்தான்

என் இதயச் சோலையில்

நான் கவனமாய்ப் பேணிய துளை

ஒரு இதயத்தை வளர்த்தது

தன்னை நிரப்ப.


  • தமிழில்: மிருணா
கவிதைகள் வாசித்த குரல்:
மிருணா
Listen On Spotify :

About the author

மிருணா

மிருணா

கோவில்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்ட மிருணா, முதுகலை ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியம் படித்தவர். வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் உள்ள இவரது எழுத்துக்கள் ஆய்விதழ்களிலும், சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website