இறுகப் பூட்டிய கதவுகளோடு, துயிலும் அண்டை வீட்டவர்
நான் மட்டுமே இரவில் அடிக்கடி தட்டப்படும் ஒலியைக் கேட்கிறேன்,
‘அபுனி, நீ வீட்டில் இருக்கிறாயா?’
இங்கு ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது
இங்கு கர்ப்பமுற்ற பசுக்களைப் போல மேகங்கள் மேய்கின்றன
பகையுணர்வோடு கதவை அழுத்தும் பசிய மூங்கில் போன்ற புல்
வீட்டை சூழ்ந்திருப்பதைக் காண முடிகிறது
‘அபுனி, நீ வீட்டில் இருக்கிறாயா?’
அரைத் தூக்கத்திலிருக்கும் என் இதயத்தோடு,
தொலைவான, ஆழமான ஒரு வலியைப் போர்த்தியபடி நான் கண்
அயர்கிறேன்
திடீரென அந்த பழைய இரவுத் தட்டல் ஒலியை நான் கேட்கிறேன்
‘அபுனி, நீ வீட்டில் இருக்கிறாயா?’
– மூல மொழி: வங்காளம் : ஷக்தி சட்டோபத்யாய்
ஆங்கிலம் வழி தமிழில் : மிருணா.
மிகவும் அருமையான கவிதை கேள்வி ஆழமான பதிவு ….