cropped-logo-150x150-copy.png
0%

Authors

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் ),
மற்றும் மலர்விழியின் மொழிபெயர்ப்பில் ‘அகாசியா மலர்கள்’
- பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். (வலசை பதிப்பகம்0

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

தேன்மொழி அசோக்

தேன்மொழி அசோக்

தேன்மொழி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூரின் தமிழ் முரசு,மக்கள் மனம்,மின்கிறுக்கல் மின்னிதழ் மற்றும் கவிமாலையின் ஆண்டுத் தொகுப்பிலும்,தமிழ் நாட்டின் வாசகசாலை இணைய இதழ் மற்றும் வளரி மாத இதழிலும் வெளியாகியிருக்கின்றன.கவிதைகளை வாசித்துக் குரல் பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்தவர்.
சிங்கப்பூரின் ஒலி 96.8ல் இவரது கவிதை வாசிப்பு ஒலித்திருக்கிறது. சிங்கப்பூரின் தங்கமுனைப் போட்டியில் (2023) இவரின் கவிதைகள் மூன்றாவது பரிசை பெற்றிருக்கிறது.

இவரது கவிதை வாசிப்பினைக் கேட்க https://youtube.com/@user-mv9zg9ry6u .

பா.சரவணன்

பா.சரவணன்

ரவி அல்லது

பட்டுக்கோட்டையைச் சார்ந்த ரவிச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ ஆகிய கல்வி பட்டங்கள் பெற்றவர். கம்ப்யூட்டர், கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருபவர். ரவி அல்லது எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

குமரகுரு

குமரகுரு

சென்னையிலுள்ள ஐ.டி துறை நிறுவனமொன்றில் பணிபுரியும் குமரகுருவின் கவிதைத் தொகுப்புகள் இதுவரை தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.

மிருணா

மிருணா

முதுகலை ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியம் படித்தவர் மிருணா. வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் உள்ள இவரது எழுத்துக்கள் ஆய்விதழ்களிலும், சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.

ந.பெரியசாமி

ந.பெரியசாமி

ஒசூரைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘நதிச்சிறை’, ‘மதுவாகினி’, ‘தோட்டாக்கள் பாயும் வெளி’, ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீல வானம்’ ஆகிய கவிதை தொகுப்புகளையும், ‘மொழியின் நிழல்’ எனும் கவிதை சார்ந்த விமர்சனக் கட்டுரை தொகுப்பையும் எழுதியுள்ளார்.

ரேவா

ரேவா

மதுரை மாநகரைச் சார்ந்த ரேவா; தற்போது பணியின் நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். இவர் எழுதிய கவிதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. ‘கவனிக்க மறந்த சொல்’ மற்றும் ‘அலை விளையாட்டு’ ஆகியவை இவரின் எழுத்தாக்கதில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்களாகும். Nutpam - Online Poetry Radio - வில் ஆர்.ஜே- வாக கவிதை நிகழ்ச்சியை தொகுத்தும் வாசித்தும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.

தீபிகா நடராஜன்

தீபிகா நடராஜன்

என் கடலுக்கு யார் சாயல், புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல் ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Biochemistry & Biotechnology துறைக்கான முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

சாய் வைஷ்ணவி

சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

மஞ்சுளா

மஞ்சுளா

மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.

“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.

பாலைவன லாந்தர்

பாலைவன லாந்தர்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறப்பிடமாக கொண்ட கவிஞர் பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

2010 -ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

இதுவரை வெளியான கவிதைத் தொகுப்புகள் :
உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் (2016, சால்ட் பதிப்பகம்), லாடம் (2018, டிஸ்கவரி புக் பேலஸ்), ஓநாய் (2021, யாவரும் பதிப்பகம்).

சிறுகதைத் தொகுப்பு : மீளி (2025, எதிர் வெளியீடு)

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவர். ‘வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி’ என்ற கவிதை தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர். ‘சதுரமான மூக்கு’ மற்றும் துரிஞ்சி’ ஆகிய கவிதை நூல்களுக்கு தமிழின் முதல் அஃபோரிச கவிதை நூலான ‘தண்ணீரின் சிரிப்பு’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். எழுத்தெனப்படுவது எனும் இலக்கணம் சார்ந்த நூலையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறுவர் இலக்கியத்திலும் பங்களித்து வரும் இவர் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

செளமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ்நாடு கலை இலக்கிய மேடை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். , சமீபத்தில் இவரின் “சதுரமான மூக்கு” சிறந்த கவிதைத் தொகுப்பு -2023க்கான படைப்பு இலக்கிய விருது பெற்றுள்ளது.

யாழினி

யாழினி

அகராதி

அகராதி

திருச்சியை சார்ந்தவர். இவரின் இயற்பெயர் கவிதா. தமிழிலக்கிய பட்டதாரியான இவர் ”அகராதி” எனும் புனைபெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெட்கச் சலனம் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதை, கவிதைப் படைப்புகள் வெளியாகி இருக்கிறது.

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

நந்தாகுமாரன்

நந்தாகுமாரன்

பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் கணினித் துறையில் பணிபுரியும் கவிஞர் நந்தாகுமாரன் பிறந்த ஊர் கோவை. இலக்கியம், ஓவியம், ஒளிப்படம் போன்ற கலைத்துறையில் ஆர்வமுள்ள இவர், ‘மைனஸ் ஒன்’ ( உயிர்மை வெளியீடு - 2012), பாழ் வட்டம் ( காலச்சுவடு பதிப்பகம் -2021) உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், மின்னூல் பதிப்பாக ‘நான் அல்லது நான்’ சிறுகதைத் தொகுப்பு நூல், ‘ கலக லகரி’ ( கவிஞர் பெருந்தேவியின் எதிர்கவிதைகள் முன்வைத்து எழுதப்பட்ட ரசனை பதிவுகள்) உள்ளிட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. ஹைக்கூ வகை கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய நந்தாகுமாரன் அயல் மொழிகளிலுள்ள கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து அளித்தது கவனத்திற்குரியது. பயணம் சார்ந்த புனைவுகளை எழுதும் ஆர்வமுடைய இவர் தற்போது ‘ரோம் செல்லும் சாலை’ எனும் புனைவு நூலை எழுதி வருகிறார்.

வில்லரசன்

வில்லரசன்

சர்வேஷ்வரன் வில்லரசன் - பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இறுதி ஆண்டு மாணவர். இலங்கை கிளிநொச்சியைச் சார்ந்தவர். 2023 ஆண்டு "பசி உறு நிலம்” எனும் கவிதைத்தொகுதியை வெளியீடு செய்து உள்ளார்

சுபி

சுபி

சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி; வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி, தற்போது முகநூலிலும் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். இவரின் எழுத்தாக்கத்தில் காலடித் தடங்கள் , தேம்பூங்கட்டி, தோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் ஆகிய தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

வருணன்

வருணன்

இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.

வித்யா.மு

வித்யா.மு

தேவிலிங்கம்

தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களில் இவர் எழுதும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. ’நெய்தல்நறுவீ’’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘கிளிச்சிறை’ எனும் சிறுகதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அன்பு மணிவேல்

அன்பு மணிவேல்

திருச்சியைச் சார்ந்த அன்பு மணிவேல் மலர் மருத்துவராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளன,

இளையவன் சிவா

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய 'இளையவன் சிவா' திண்டுக்கல் மாவட்டம் - அய்யம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு ஆகிய இரண்டு ஹைக்கூ நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, படைப்பு கல்வெட்டு போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

ஜெயபால் பழனியாண்டி

ஜெயபால் பழனியாண்டி

ஜெயபால் பழனியாண்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர். பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்.
கவிஞர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.
சிற்றேடு, உயிர் எழுத்து, நுட்பம் ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. மிதக்கும் வெளி, ஆதலால் சொல்கிறேன் இவருடைய கவிதைத் தொகுப்புகள். மினிமலிசம் என்னும் தன்னம்பிக்கை நூல் இவருடைய சமீபத்திய படைப்பாகும்.

ம.கண்ணம்மாள்

ம.கண்ணம்மாள்

மருத நிலம் தஞ்சையை சொந்தமாகக் கொண்டவர். பொதுவெளியில் கவிதை, சிறுகதை என இயங்கி வருகிறார்.
"சன்னத்தூறல் " இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.
அடுத்த கவிதைத்தொகுப்பு “அதகளத்தி” சமீபத்தில் வெளியானது.

தினுஷா மகாலிங்கம்.

தினுஷா மகாலிங்கம்.

இலங்கையைச் சார்ந்தவர். ஆவநாழி, கதிர்ஸ், ஆதிரை தமிழ் நெஞ்சம் இதழ் மற்றும் இலங்கையின் காற்புள்ளி சஞ்சிகை உள்ளிட்ட இதழ்களில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளது.

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்

கயூரி புவிராசா

கயூரி புவிராசா

இலங்கை சார்ந்த கயூரி புவிராசா தனது 19 வது வயதிலிருந்து கவிதைகளை எழுதி வருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ” ஒரு பகல், ஒரு கடல், ஒரு வனம்” எனும் கவிதைத் தொகுப்பை ‘கடல் பதிப்பகம்’ சமீபத்தில் வெளியிட்டது.

மதுரா

மதுரா

ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான எழுத்தாளர் மதுரா என்கிற தேன்மொழி ராஜகோபால் மன்னார்குடியைச் சார்ந்தவர். கவிஞர், கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்கி வருபவர் ! நவீனத்துவக் கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதுவதில் திறன் வாய்ந்தவராகவும் உள்ளார். இவரின் “சொல் எனும் வெண் புறா” , “பெண் பறவைகளின் மரம்” உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

மதுரை சத்யா

மதுரை சத்யா

மதுரையில் பிறந்து வளர்ந்த மதுரை சத்யா தற்போது கனடாவில் இளங்குழந்தைகளின் ஆசிரியராக பணிபுரிகிறார் குழந்தைகளுக்கான மனநலன் கட்டுரை மற்றும் மனித உளவியல் தொடர்களை பல்வேறு வெகுஜன இதழ்களிலும் எழுதி வருகிறார்.

பிரியதர்ஷினி

பிரியதர்ஷினி

திருச்சியை சார்ந்த பிரியதர்ஷினி இளங்கலை விலங்கியல், முதுகலை விலங்கியல், இளங்கலை கல்வியியல் பயின்றுள்ளார். பள்ளிக்கல்வித் துறையின் கவிதை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி ஆசிரியர் மற்றும் துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கான சமூகப்பணி தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.
படைப்பு, அணங்கு, நீலம், காற்றுவெளி, இந்து தமிழ் திசை, குவிகம், நடு இதழ், நுட்பம், கலகம், கொலுசு ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “ தோடயம்” யாவரும் பதிப்பகம் மூலம் 2024 ஆம் ஆண்டு கோவை புத்தகக் காட்சியின் போது வெளியானது.

ராணி கணேஷ்

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ராணி கணேஷ், கணிப்பொறி அறிவியல் படித்து தற்சமயம் பப்புவா நியு கினியா தேசத்தில் சொந்த தொழிலை நிர்வகித்து அங்கேயே வசிக்கிறார்.பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். பள்ளிக்காலம் தொட்டே கவிதைகள், கட்டுரைகள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். இணையத்தில் கவிதை, திரைவிமர்சனம் என எழுதி வருபவர். சமூக சேவையில் விருப்பம் உடையவர்.

தேவசீமா

தேவசீமா

குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இரா.மதிபாலா

இரா.மதிபாலா

சென்னையைச் சார்ந்த இவரின் இயற்பெயர் பாலாஜி. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் சார்புச் செயலாளராக பணியாற்றிவர்.
இவரின் முதலாவது கவிதை 1984 -இல் "தீபம்" இலக்கிய இதழில் வெளியானது. 40 ஆண்டுகளாக பெரும் விருப்பத்தோடு கவிதைத்தளத்தில் இயங்கி வருகிறார்.இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

நெருடலும் வருடலும் (1988),
84 கவிதைகள் ( 2018),
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் ( 2020)]

எஸ்தர்

எஸ்தர்

இலங்கையின் மலையக மண்ணைச் சேர்ந்தவர் எஸ்தர் . மலையகத்தில் அட்டன் – டிக்கோயாவை பிறப்பிடமாகவும் திருகோண மலையை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் உயர்கல்வியையும் பெற்று; பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் கலைமாணிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியலில் டிப்ளோமாவையும் முடித்து தற்போது இலங்கை அரசின் முக்கிய பதவியில் பணியாற்றுகிறார்.

சென்னை – போதிவனம் பதிப்பகம் வெளியிட்ட இவரின் முதல் கவிதைத் தொகுப்பான“கால் பட்டு உடைந்தது வானம்” ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்தவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு “பெரு மலை வெடிப்புகள்” பூபாளம் புத்தகப் பண்ணை பதிப்பகம் மூலமாக வெளியானது. இலங்கையின் மலையகத் தமிழர்களின் சவால் மிகுந்த வாழ்வியலையும் வலிகளையும் அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையும் “பெரு மலை வெடிப்புகள்” தொகுப்பிலுள்ள கவிதைகளின் கருப்பொருளாக உள்ளன.

இலட்சுமண பிரகாசம்

இலட்சுமண பிரகாசம்

பச்சோந்தி

பச்சோந்தி

கவிஞர், பத்திரிகையாளர். இயற்பெயர் இரா.ச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்' என்னும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகியுள்ளன.

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். ‘நிலாரசிகன்’ என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் உள்ளார்.

வலைத்தளம்: www.rajeshvairapandian.com

ரத்னா வெங்கட்

ரத்னா வெங்கட்

விஜி பழனிச்சாமி

விஜி பழனிச்சாமி

அம்பிகா குமரன்

அம்பிகா குமரன்

திருப்பூரைச் சார்ந்த அம்பிகா குமரன் சமகாலத்தில் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களில் ஒருவராக திகழ்கிறார், மரபுக்கவிதைகளிலும் நவீனக் கவிதைகளிலும் சிறப்பான படைப்பாக்கத் திறன் பெற்றவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல பொறுப்புகளை கவனித்த இவர், தற்போது திரைப்பட பாடலாசிரியராகவும், திரைப்பட துணை இயக்குநராகவும் பணிபுரிகிறார். “காலம்” உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் இவரின் படைப்பாக்கத்தில் வெளிவந்துள்ளன. வேரல் புக்ஸ் எனும் பதிப்பகத்தை நிறுவி, கவனத்திற்குரிய பல நூல்களை பதிப்பித்தும் வருகிறார்.

அன்புத்தோழி ஜெயஸ்ரீ

அன்புத்தோழி ஜெயஸ்ரீ

முதுகலை வணிக மேலாண்மையியல் மற்றும் முதுகலை ஆலோசனை உளவியல் பட்டதாரியான ‘அன்புத்தோழி’ ஜெயஸ்ரீ; அகில இந்திய வானொலியில் தொகுப்பாளராகவும், பொதிகை தொலைக்காட்சியில் வாசிப்பாளராகவும் பணிபுரியும் இவர் உளவியல் ஆலோசகராகவும், கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

எமக்கும் தொழில், இடை வெளியில் உடையும் பூ, நிலாக்கள் மிதக்கும் தேநீர், தழும்பின் மீதான வருடல் ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்கள் இவரின் எழுத்தாக்கத்தில் இதுவரை வெளியாகி உள்ளன.

சேலம் ராஜா

சேலம் ராஜா

கனரக வாகன ஓட்டுனராக பணிபுரியும் சேலம் ராஜா இலக்கிய வாசிப்பு, கவிதை, கதை, கட்டுரை, போட்டோகிராபி என இயங்கி வருபவர்.
மூன்று வருடங்களுக்கு முன் "கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள்" எனும் கவிதை தொகுப்பு வெளியானது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது, படைப்பு சிறந்த தொகுப்பு விருது , தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வளரும் படைப்பாளர் விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளார். இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பான ’மயில் பற்றிய குறிப்புகள்’ சமீபத்தில் (2023- பிப்ரவரி) வெளியானது.

போஸ் கென்னடி

போஸ் கென்னடி

திருநெல்வேலியைச் சார்ந்த சுபாஷ் சந்திர போஸ் கென்னடி “போஸ்கென்னடி” எனும் புனைப்பெயரில் அறிமுகம் ஆகியுள்ளார். பட்டதாரியான இவர் சென்னையில் தற்போது வசித்து வருகிறார். பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற ”நந்தன்” என்கிற குறும்படத்தின் இயக்குநர். திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

காயத்ரி ராஜசேகர்

காயத்ரி ராஜசேகர்

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.

சிறார் இலக்கியத்திலும் பங்களித்துவரும் பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் படைத்திருக்கிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழ்நாட்டு அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு ' கடவுள் அலையும் நகரம்' சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பத்தால் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

க.மோகனரங்கன்

க.மோகனரங்கன்

தீவிர வாசகர்களுக்கு பரிச்சயமான இலக்கியஆளுமை க.மோகனரங்கன் அவர்கள். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வருகிறார். இது வரை பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

கரிகாலன்

கரிகாலன்

கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்த கரிகாலன்; தொன்னூறுகளிலிருந்து தமிழிலக்கியத்தில் இயங்கிவருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் எழுதிய சில கவிதைப் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘களம் புதிது’ என்னும் இதழை நடத்தியுள்ளார்.
அப்போதிருந்த இடைவெளியில், புலன் வேட்டை, தேவதூதர்களின் காலடிச் சத்தம், இழப்பில் அறிவது, ஆறாவது நிலம், அபத்தங்களின் சிம்பொனி, தாமரை மழை ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கரிகாலன் கவிதைகள்’ தொகுப்பாக உயிர் எழுத்து வெளியீடாக வெளிவந்துள்ளன. ‘நிலாவை வரைபவன்’ என்னும் நாவல் உள்பட பல படைப்புகளை எழுதியுள்ளார்.

இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் பிரகாசம்

கார்த்திக் பிரகாசம்

சேலத்தை பிறப்பிடமாக கொண்ட கார்த்திக் பிரகாசம்; தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார்.

கயல்

கயல்

கவிஞர், மொழிபெயர்ப்பாளர்

பா.கயல் விழி

பா.கயல் விழி

கடையநல்லூர் பிறப்பிடமாக கொண்ட கயல்விழி, ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது ஈரோடு மாவட்ட வருவாய் துறையில் அரசு அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். சமூகம் மற்றும் பெண்களின் உளவியலில் எழும் பிரச்சினைகளை இவரது எழுத்துக்களின் மூலம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். அச்சு, இணைய இதழ்களில் இவரின் சில கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் “குளிர் இரவுக்கு அவள் விழிகளின் செந்நிறம்” எனும் கவிதைத் தொகுப்பை நுட்பம் - கவிதை இணைய இதழ் பதிப்பித்து வெளியிட்டது.

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன் (1971) திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.

இவரது கவிதைத் தொகுப்புகள் :
‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ (2010, அகநாழிகைப் பதிப்பகம்),

‘இரவைப் பருகும் பறவை’ (2011, காலச்சுவடு பதிப்பகம்),

‘அறிதலின் தீ’ (2015, பாதரசம் வெளியீடு) ,

’மண்டோவின் காதலி’ (2021, தமிழ்வெளி வெளியீடு)

மைதிலி கஸ்தூரிரங்கன்

மைதிலி கஸ்தூரிரங்கன்

அரசுப்பள்ளி ஆசிரியர், புதுக்கோட்டை த.மு.எ.க.ச மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார். இவரின் கவிதைப் படைப்புகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.

பா.ராஜா

பா.ராஜா

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த பா.ராஜா தறித்தொழிலாளியாய்ப் பணிபுரிகிறார். இவரின் எழுத்தாக்கத்தில் அம்மா, முதல் முதலாய், மாயப்பட்சி, நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல், நிழற்படத்தில் மறைந்திருக்கும் முதுகு ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்கள் , கோடை காலத்தின் சாலை எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளன.

பத்ம குமாரி .

பத்ம குமாரி .

நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையிலுள்ள ஐ. டி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் எழுதும் சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இவரின் சிறுகதைகள் “நட்சத்திரம்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.

க. புனிதன்

க. புனிதன்

இளங்கலை நுண்உயிரியல் பட்டத்தாரியான இவர் தர்மபுரி மாவட்டம் h. புதுப்பட்டி கிராமத்தை சார்ந்தவர். விவசாயம் தொழில் செய்து வருகிறார் இது வரை ஹைக்கூ நூல், ”கோழி கொண்டை பூவும் , கொஞ்சம் தேநீரும்” ஆகிய நூல்கள் வெளியாகி உள்ளது.

றஹீமா பைஸல்

றஹீமா பைஸல்

றாம் சந்தோஷ்

றாம் சந்தோஷ்

வேலூர் வாணியம்பாடியிலுள்ள உதயேந்திரம் கிராமத்தில் பிறந்த றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முக.விமல் குமார். ஆந்திரா மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழிபெயர்ப்பியல் துறையில் பட்டம் பெற்றார். திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 'நச்சினார்க்கினியரின் தொல்காப்பியக் கோட்பாடு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். சண்முக.விமல் குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார்.

சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை ’கண்ணீரின் நிறங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். தெலுங்கிலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து இலக்கிய இதழ்களில் வெளியிட்டுள்ளார். 'இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.
தமிழவன், ஞானக்கூத்தன், சி.மணி, ரமேஷ் பிரேம், ஆண்டாள், ஜெயங்கொண்டார் போன்றோரை ஆதர்சமாகக் கூறுகிறார். கவிஞர் அப்துல் ரகுமானை தொடக்ககால ஆதர்சமாகக் கூறுகிறார். தொல்காப்பியவியல், கவிதையியல், கலை, இலக்கியத் திறனாய்வு, கோட்பாடு, நாட்டார் வழக்காற்றியல், ஒப்பிலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ச.சக்தி

ச.சக்தி

சவிதா

சவிதா

தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் வசிக்கும் சவிதா., இது வரை ‘யாமத்தில் அடர்ந்த மழை’, ‘உபாசகி’, ‘கைநிறை செந்தழல்’,
‘ஊன்முகிழ் மிருகம்’ என நான்கு கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

நுட்பம்

நுட்பம்

தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார்

அன்பாதவன்

அன்பாதவன்

குடந்தை அனிதா

குடந்தை அனிதா

தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து, தற்போது ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் வசித்து வரும் குடந்தை அனிதாவின் இயற்பெயர் அனிதா பாபு. ’கவிதையும் கற்று மற’ மற்றும் ’நினைவுக் குமிழிகள்’ ஆகிய இவரின் கவிதை தொகுப்புகளை ’புஸ்தகா’- டிஜிட்டல் மீடியா வெளியிட்டுள்ளது.

பாரதி சித்ரா

பாரதி சித்ரா

கோவையைச் சார்ந்த பாரதி சித்ராவின் இயற்பெயர் சித்ரா, தீவிர இலக்கிய வாசிப்பாளரான இவர் கல்கி, கோவை ஹெரால்ட் போன்ற இதழ்களில் விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உடையவராக உள்ளார். இவரின் கவிதைகள் நுட்பம் - கவிதை இணைய இதழில் வெளியாகி இருக்கிறது.

சந்திரா மனோகரன்

சந்திரா மனோகரன்

தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சந்திரா மனோகரன் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராக பணி புரிந்தவர். இதுவரை கவிதை , கதை , புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என 38 நூல்களை எழுதி உள்ளார். அண்மையில் 'அசையும் இருள் ' கவிதை நூலுக்கு தமிழ்நாடு அரசின் ' நற்றமிழ் பாவலர் விருது ' , தவிர , வெவ்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

ஃபஷ்றி

ஃபஷ்றி

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள சம்மாந்துறை ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில ஆசிரியராக அரச பாடசாலையில் பணி புரிகிறார். கடந்த வருடம் தாயதி பதிப்பக வெளியீடாக இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு "நீல வயலும் பச்சை வானமும்" வெளிவந்தது. நவீனம் கடந்த கவிதைகளை பரிசோதனை முயற்சியாக எழுதி வரும் இவரது கவிதைகள், ஆங்கிலம், மலையாளம், சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. வியூகம், படிகள், நீலம், உள்ளம், நடுகல், தனிமைவெளி போன்ற சிற்றிதழ்களிலும் நடு, வல்லினம், காற் புள்ளி, காற்று வெளி, நுட்பம் போன்ற மின்னிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

ஜி.சிவக்குமார்

ஜி.சிவக்குமார்

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.

கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும் விருப்பம் கொண்டவர். ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம், புரவி இதழ்களிலும், கொலுசு, கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது கவிதைகள், சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை, ஆத்மாநாமின் கடவுள், தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

இமாம் அத்னான்

இமாம் அத்னான்

இமாம் அத்னான் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். இளநிலை சமூக ஆய்வாளராக நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.
கவிதை, Flash fiction, கவிதைப் பிரதிகள் மீதான கோட்பாட்டு விமர்சனங்கள் என எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்.

இவருடைய 'மொழியின் மீது சத்தியமாக' எனும் கவிதைத் தொகுதி மோக்லி பதிப்பகத்தின் வெளியீடாகவும், 'மந்திரிக்கப்பட்ட சொற்கள்' எனும் flash fictions பிரதிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாகவும் வந்துள்ளது.

மா.காளிதாஸ்

மா.காளிதாஸ்

தமிழ்நாட்டின் மதுரை மாநகரைச் சார்ந்த மா.காளிதாஸ், (50) வணிகவியல் ஆசிரியராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார்.

இதுவரை வெளிவந்துள்ள கவிதை நூல்கள்:
1.சந்திப்பின் கடைசி நொடியில் (1998)
2.அட்சதை (2000)
3.பிம்பங்களின் மீது ஒரு கல் (2003)
4.திருடனின் வீடு (2015)
5.பெருஞ்சொல்லின் குடல் (2020)
6.ரகசியங்களின் புகைப்படம்(2021)
7.மை(2021)
8.நீ பாரித்த என் உதடுகள்(2022)

பெற்ற விருதுகள் :
1.செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு (தமுஎகச) - 1999
2.கவிச்சுடர் விருது (படைப்பு குழுமம்) - 2019.

செயல்பாடுகள்:
கவிதை எழுதுதல், நூல் விமர்சனம் செய்தல் (கதை, கவிதை, நாவல்),
ஹைக்கூ தொடர் (முகநூல்)
பெண் கவிஞர்களின் நவீன கவிதைகள் - கட்டுரைத் தொடர் (முகநூல்)

கவிதை வெளிவந்துள்ள இதழ்கள் :
காலச்சுவடு, கணையாழி, உயிர்மை, உயிரெழுத்து, புதிய பார்வை, புரவி, பேசும் புதிய சக்தி, ஆவநாழி, இலக்கியவெளி(கனடா), செம்மலர், மணல்வீடு, தாமரை, கனவு, தினமணிக் கதிர், ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், சுதேசமித்திரன்.

இணைய இதழ்கள் :
கொலுசு, தகவு, கல்வெட்டு, காற்றுவெளி

முருக தீட்சண்யா

முருக தீட்சண்யா

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ‘கீரனூர்’ கிராமத்தை பூர்வீகமாக கொண்ட முருகதீட்சண்யா, தற்போது வசிப்பது மயிலாடுதுறையில். வணிக நிறுவனமொன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். “நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்” எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். இவரின் கவிதைப் படைப்புகள் சொற்கள், காக்கைச் சிறகினிலே, புதுப்புனல், கணையாழி போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

முத்துராசா குமார்

முத்துராசா குமார்

கவிஞர், எழுத்தாளர். இவரின் பிடிமண், நீர்ச்சுழி எனும் கவிதைத் தொகுப்புகள், ஈத்து எனும் சிறுகதைத் தொகுப்பு ஆகிய நூல்களை சால்ட் & தன்னறம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சிவநித்யஸ்ரீ

சிவநித்யஸ்ரீ

தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிச்செட்டிபாளையத்தை சார்ந்த சிவ நித்யஸ்ரீ -இன் இயற்பெயர் நித்யா சதாசிவம். சிவநித்யஸ்ரீ எனும் பெயரில் ‘மகரந்தன்’ ,  ’நீ ததும்பும் பெருவனம்’ என இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்களை  வெளியிட்டுள்ளார். 

ப்ரிம்யா க்ராஸ்வின்

ப்ரிம்யா க்ராஸ்வின்

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தை சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள், சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “தப்பரும்பு” வாசகசாலை பதிப்பகத்தின் வெளியீடாக 2022-ஆம் ஆண்டு வெளியானது.

பிரியா பாஸ்கரன்

பிரியா பாஸ்கரன்

இயற்பெயர் “பத்மப்ரியா பாஸ்கரன்”
காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்த இவர் இருபத்திரண்டு வருடத்திற்கும் மேலாக மிச்சிகன் மாகாணம், வட அமெரிக்காவில் பொது நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார்

இரண்டு வருடங்களுக்கும் மேலாக கட்டுரைகள், கவிதைகள், நூல் அறிமுகம், ஆகியவற்றைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதுகிறார். பல்வேறு இலக்கிய தளங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், குறுந்தொகை போன்ற இலக்கியங்களைக் கதை வடிவில் குழுவாக இணைந்து நிகழ்ச்சிகளை அளித்துள்ள இவரின் படைப்புகள் இனிய உதயம், கணையாழி,
நக்கீரன், கொலுசு, படைப்பு கல்வெட்டு, படைப்பு தகவு, கதம்பம், தமிழ்ச்சாரல், வளரி, வல்லினச் சிறகுகள், தமிழ் டாக்ஸ், கொக்கரக்கோ, தாரகை, ஆக்கம், ஆனந்தசந்திரிகை, புக் டே இணையதளம், காணிநிலம், புன்னகை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. மரபுக் கவிதைகளின் மேலுள்ள ஈடுபாட்டால் வெண்பா பயிற்சிப் பட்டறை நடத்துகிறார். சேலம் தமிழ் இலக்கியப் பேரவையில் பாரதியார் விருதும், படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளி விருதும், தமிழால் இணைவோம் உலகத் தனிழ் களத்தின் தங்கமங்கை விருதும், “காற்றின் மீதொரு நடனம்” கவிதைத் தொகுப்பிற்கு, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளி விருதும் பெற்றுள்ளார்.
கவிதைகள் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

“நினைவில் துடிக்கும் இதயம்”, “காற்றின் மீதொரு நடனம்”, “சலனமின்றி மிதக்கும் இறகு”, “The Horizon Of Proximity” , “யாம நுகர் யட்சி”, “சிறு வீ ஞாழல்” மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குழு வெளியீட்டில், “பால்யத்தின் சாவி” கவிதை நூலும், வல்லினச் சிறகுகள் வெளியீட்டில், “ஒரு கவிஞனும் பல கவிதைகளும்” தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார்.

ராஜலெட்சுமி பாண்டியன்

ராஜலெட்சுமி பாண்டியன்

கணித ஆசிரியை ; பெரம்பலூர்

அ.ரோஸ்லின்

அ.ரோஸ்லின்

மதுரை மாவட்டம், டி.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இளம் பருவத்திலேயே கவிதை இயற்றும் திறன் கொண்ட இவர், கல்லூரி பருவத்தில் தனது முதல் கவிதையை எழுதினார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும், வரலாறு,கல்வியியல், போன்றவற்றிலும் பட்டங்கள் பெற்றவர். இவர் கவிதைகள் பெண்ணின் அக உணர்வுகளையும், உறவின் நெருக்கடியையும் மிக நேர்த்தியாக பேசுபவை. சங்க கால பெண் புலவர்களுக்கு இணையான கவியாளுமையை கொண்டவர். இவரின் கவிதைகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. சுற்றுபுற சூழல் சார்ந்த கட்டுரைகளும் எழுதி வருகிறார். தற்போது அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

படைப்புகள் :
மழை எனும் பெண்- 2011,

அழுகிய முதல் துளி- 2015.

மஞ்சள் முத்தம்- 2015,

காடறியாது பூக்கும் மலர்- 2017,

ரோஸ்லின் படைப்புலகம் (2017),

பயணத்தின் மொழி (2020)

ச.விசயலட்சுமி .

ச.விசயலட்சுமி .

சென்னையை சார்ந்த ச. விசயலட்சுமி தமிழிலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். 2002 இல் தமிழில் முனைவர் பட்டம் பெற்று ; சென்னையில் அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இவர் எழுதிய நூல்கள்:
முதல் கவிதைத் தொகுப்பு “பெருவெளிப்பெண்” 2007 இல் வெளியானது.
இரண்டாம் கவிதைத் தொகுப்பு ”எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை” 2011ஆம் ஆண்டிலும்,
மூன்றாம் கவிதைத் தொகுப்பு "என் வனதேவதை" 2016 ஆம் ஆண்டிலும்; நான்காம் கவிதைத் தொகுப்பு பேரன்பின் கனதி” 2018 ஆம் ஆண்டிலும் வெளியானது.

"தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை" எனும் ஆய்வுநூல் 2002 இல் வெளிவந்துள்ளது. "பெண்ணெழுத்து -களமும் அரசியலும்' எனும் நூல் 2011 இல் வெளிவந்துள்ளது.

"லண்டாய்" (2014)என்னும் இவரின் மொழி பெயர்ப்பு நூல் ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களையும் நவீன கவிதைகளையும் உள்ளடக்கியது. காளி எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் 2018-ஆம் ஆண்டு வெளியானது.

இவருடைய "காளி" சிறுகதை கேரள அரசின் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் துணைபாடமாக இருக்கிறது.

"உயிரெழுத்து" இதழில் வெளியான இவரது சில கவிதைகள்.., "உயிரெழுத்து கவிதைகள்" என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு புத்தகத்தில் வெளியிட்டும்,. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கொலம்பியா ஜர்னல் இதழிலும், சர்வதேச அளவிலான கவனம் பெற்ற National Translation Month மின்னிதழிலும் இவரது கவிதையை மொழி பெயர்த்து வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளனர்.

கி.சரஸ்வதி

கி.சரஸ்வதி

தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டைச் சார்ந்த சரஸ்வதி, அரசுப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிகிறார்.
ஆனந்த விகடன், கணையாழி, குமுதம், அவள் விகடன், தினமலர்- பெண்கள் மலர், தினத்தந்தி- தேவதை, அம்ருதா, செல்லமே, மங்கையர் மலர், இந்து தமிழ்திசை -காமதேனு, காற்றுவெளி போன்ற பத்திரிகைகளில் இவரின் கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் வெளிவந்துள்ளன.

சிவசங்கர் எஸ்.ஜே

சிவசங்கர் எஸ்.ஜே

எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.

இவரது நூல்கள்:

கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012)
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017)
யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019)
இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121)
அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022)
.. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022)
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022)

( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)

ந.சிவநேசன்

ந.சிவநேசன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான ந.சிவநேசன் இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற இதழ்களில் வெளியாகி வருகின்றன.

'கானங்களின் மென்சிறை', மீன் காட்டி விரல், இதயங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை ஆகிய கவிதைத் தொகுப்புகள் . ’ ஃ வரைகிறது தேனி’ - ஹைக்கூ தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியாகி உள்ளன.

ப.தாணப்பன்

ப.தாணப்பன்

தென்றல்

கோபிசெட்டிபாளையம் ஊரைச் சார்ந்தவர். அறிவியல் தொடர்பான தேடல் உடையவர் என தெரிவிக்கும் இவரின் 'கொங்காடை மனிதனின் நீரடித் தடங்கள்' எனும் முதல் கவிதைத் தொகுப்பை வாலறிவன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உமா மோகன்

உமா மோகன்

புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார். இவர், டார்வின் படிக்காத குருவி, ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம், துயரங்களின் பின்வாசல், நீங்கள் உங்களைப் போலில்லை’ தழையுணர்த்தும் சிறுவாழ்வு , ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம், நீங்கள் உங்களைப் போலில்லை, மிதக்கும் வரை அலங்காரம், தாய்குலத்தின் பேராதரவோடு , கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள், , நீ.. நான்.. நடுவில் ஒரு ம், பாசாங்குகளின் அகராதி, ’முகம் அழிந்த காலம்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரைத் தொகுப்பையும், விடுதலைக் களத்தில் வீரமகளிர் எனும் கட்டுரைத் தொகுப்பை ஐந்து பகுதி நூல்களாகவும் வெளியிட்டு இருக்கிறார். நுட்பம் கவிதை இணைய இதழ் உள்ளிட்ட அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் பல ஆக்கங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜனவரி 5 - 2025 அன்று நள்ளிரவு உடல்நலக்குறைவால் காலமானார்.

வசந்த தீபன்

வசந்த தீபன்

வேல் கண்ணன்

வேல் கண்ணன்

தனக்கு இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என்று தொல்காப்பியர், வள்ளுவர் முதல் அனைத்து கவிஞர்களும் என கூறும் வேல்கண்ணன் இராமநாதபுரத்தில் பிறந்தவர்; திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வியை நிறைவுச் செய்தவர். வேல்கண்ணன் திருவண்ணாமலையில் பள்ளிக் கல்வி கற்கும் சமயத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இயங்கிய தோழர்கள் அறிமுகமானார்கள். மாதாந்திர கூட்டத்தில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், போன்ற பல படைப்பாளிகள் வருகை தந்து பேசுவார்கள். முடிந்தவரை தவறாமல் அக்கூட்டங்களுக்குச் சென்றார். தமுஎச தோழர்கள் வழியாகவே பல புத்தகங்கள் அவருக்கு அறிமுகமாயின. அவர்களின் வழியாகவே 'மார்க்சியம்' மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காந்தியம், தமிழ் தேசியம் மீதும் பெரும் ஈடுபாடு இருந்தது.

இவரின் முதல் கவிதை உயிரோசை இணைய இதழில் (2009- ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இதழ்) 'தூரிகை இறகு' என்ற தலைப்பில் வெளியானது.
இவரின் முதல் கவிதைத் தொகுப்பு நூலை வம்சி பதிப்பகம் 2013-ல் ' இசைக்காத இசை குறிப்பு' என்ற பெயரில் வெளியிட்டது. யாவரும் பதிப்பகம் 2018-ல் ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’ என்ற தலைப்பில் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூலும், 2023-ல் ‘லிங்க விரல்’ என்ற தலைப்பில் மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு உதவி : தமிழ் விக்கி

அனுராதா ஆனந்த்

அனுராதா ஆனந்த்

அனுராதா ஆனந்தின் மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைகள் விகடன் – தடம், உயிர்மை, கல்குதிரை, நம் நற்றிணை, கல்கி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும், வனம், வாசகசாலை, கனலி, ஓலைச்சுவடி போன்ற இணையை இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. பரவலான வாசகதளத்தை அடைந்த அக்கவிதைகள் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று நல்ல விமர்சனங்களையும் துவக்கிவைத்தன. இவரின் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழியாளுமை கவிதைகளின் மொழிபெயர்ப்பில் தனித்துவத்துடன் வெளிப்படுகிறது.

இதுவரை .,

எண்: 7 போல் வளைபவர்கள்,
கற்பனைகளால் நிறைந்த துளை,
கறுப்பு உடம்பு,
ஆணின் சிரிப்பு,
நிக்கனோர் பர்ரா: 27 எதிர் கவிதைகள் ,
எமிலி டிக்கின்சன் - தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
ஆகிய தொகுப்புகள் இவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கின்றன.
மேலும், அழிக்க முடியாத ஒரு சொல் (தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்) இவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கின்றன.

சிறந்த மொழிபெயர்ப்புக்காக ‘எண்: 7 போல் வளைபவர்கள்’ நூல் ஆத்மநாம் விருதையும், கறுப்பு உடம்பு நூல் விகடன் விருதையும் அனுராதா ஆனந்த் பெற்றுள்ளார்.

ச. அர்ஜூன்ராச்

ச. அர்ஜூன்ராச்

அய்யனார் ஈடாடி

அய்யனார் ஈடாடி

மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் கோவை தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார். கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

இதுவரை வெளியான அய்யனார் ஈடாடியின் நூல்கள்

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி,
எனதூர் சரித்திரம் - சிறுகதைகள்,
மடியேந்தும் நிலங்கள்- ஹைக்கூ கவிதைகள் ,
மூதூர்க் காதை- சிறுகதைகள்.

பாபு பிரித்விராஜ்

பாபு பிரித்விராஜ்

நாகர்கோவிலில் பில்டிங் இண்டீரியர் தொழில் செய்துவரும் பாபு பிரித்விராஜ் எழுதிய " இம்மொழி பெருங்கூடு " எனும் தலைப்பில் எனது கவிதைத் தொகுதியை 2022-ஆண்டு வாலறிவன் பதிப்பகம் மூலமாக நெல்லை பொருநை புத்தகக் கண்காட்சியில் கவிஞர் லெக்ஷ்மி மணிவண்ணன் தலைமையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பிற்கு கவிஞர் கலாப்ரியா முன்னுரை எழுதியியிருக்கிறார்.

இவரின் கவிதைகள் "அரூ " "மயிர்" இணைய இதழ்களிலும், கணையாழி அச்சு இதழிலும் வெளியாகி உள்ளன.

இரா.பூபாலன்

இரா.பூபாலன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பெத்தநாயக்கனூர் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சூலக்கல் கிராமத்தில் வசிக்கிறார். கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி. பொம்மைகளின் மொழி, பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆதிமுகத்தின் காலப்பிரதி, தீ நுண்மிகளின் காலம், அரூபத்தின் வாசனை, திரும்புதல் சாத்தியமற்ற பாதை, ஹோ.. என்றொரு கவிதை, நின் நெஞ்சு நேர்பவள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

பொம்மைகளின் மொழி தொகுப்பு யூத் கிளப் இந்தியா அமைப்பின் சிறந்த இளம் எழுத்தாளர் விருதைப் பெற்றது. பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு தொகுப்புக்கு உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார். ஆதிமுகத்தின் காலப் பிரதி கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில அளவிலான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில அளவிலான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, நாங்கள் மூன்று இலக்கியகத்தின் சிறந்த புதுக்கவிதைக்கான விருது என விருதுகளைப் பெற்றது.

மேலும் இவர் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் இளம் எழுத்தாளர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பொள்ளாச்சியில் நண்பர்களுடன் இணைந்து
‘பொள்ளாச்சி இலக்கிய வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பைத் துவங்கி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறார்.
‘கொலுசு’ என்கிற மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறார். சாகித்ய அகாடெமி சார்பில் டெல்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருக்கிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கப்பட்டிருக்கின்றன.

எஸ். பிருந்தா இளங்கோவன்

எஸ். பிருந்தா இளங்கோவன்

தினேஷ் பாரதி

தினேஷ் பாரதி

அ.ஈஸ்டர் ராஜ்

அ.ஈஸ்டர் ராஜ்

அ.ஈஸ்டர் ராஜ் என்னும் இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். காலச்சுவடு, உயிர்மெய்,, புதிய கோடங்கி, தாமரை, கல்கி, அரும்பு போன்ற இதழ்களில் இவர்தம் கவிதைகள் வெளிவந்துள்ளன. இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றும் கவிதை குறித்து மாணவர்களிடம் உரையாற்றியுள்ளார். குறிப்பாக இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போர்க்காலச் சூழல் என்ற தலைப்பில் பி.ஏ.ஆனர்ஸ் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார். 2002ல் பொதிகைத் தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் என்னும் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று இவர்தம் கவிதைகள் ஒளிபரப்பப்பட்டன. கோடைப் பண்பலையில் கதவைத் தட்டும் கற்பனைப் பகுதியில் சங்கக் கவிஞர்களைக் குறித்து இவர் எழுதி அனுப்பியதை அவர்கள் ஒலிபரப்பு செய்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகச் சென்னை மயிலாப்பூரில் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய கலை இரவு நிகழ்ச்சியில் இவரது கவிதை முதல் பரிசைப் பெற்றது. சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களிடம் நவீன கவிதைகள் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் உரை நிகழ்த்தி வருகிறார்.

ச.ஈஸ்வரானந்தம்

ச.ஈஸ்வரானந்தம்

திருவாரூர் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர். ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார். தமிழ் மீதான பற்று உள்ளதாக தெரிவிக்கும் இவர் கவிதை, கட்டுரை, மேடைப் பேச்சு ஆகியவைகளில் விருப்பமுள்ளவராக உள்ளார் .
'என் மொழியில் என் காதல்', இவரின் முதல் கவிதைத் தொகுப்பு 'கத்தும் குயிலோசை' என்ற நூலை கடந்த 2021ம் ஆண்டு இணையவழி நூலாக வெளியிட்டுள்ளார்.

பா.கங்கா

பா.கங்கா

சிங்கப்பூரைச் சார்ந்த பா.கங்காவின் கவிதைகள் மற்றும் கதைகள் பல்வேறு மாதாந்திர அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. சிங்கை கவிமாலை அமைப்பில் கவிதைகளுக்காகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் சிறுகதைக்காகவும் பரிசுகள் பெற்றுள்ளார். கவியரங்கம், பட்டி மன்றங்களின் பேச்சாளராகவும் திகழ்கிறார்.

ஹரணி

ஹரணி

ஜெயபாரதி

ஜெயபாரதி

ஜே.ஜே. அனிட்டா

ஜே.ஜே. அனிட்டா

Msw.,M.phil (சமூகப் பணி) பட்டம் பெற்றிருக்கும் ஜே.ஜே.அனிட்டா அதே துறையில் துணைப் பேராசிரியராகவும்; பிறகு
அனைத்திந்திய வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணிபுரிந்தவர்.

இரண்டாம் தேநீர் - கவிதை தொகுப்பு மற்றும் யாயும் ஞாயும் - குறுநாவல் ஆகிய நூல்களை எழுதி உள்ளார்

க.சி.அம்பிகாவர்ஷினி

க.சி.அம்பிகாவர்ஷினி

கனகா பாலன்

கனகா பாலன்

தென்காசி மாவட்டம் வெள்ளாகுளம் கிராமத்தில் பிறந்த கனகா பாலன், தற்போது சென்னையில் வசிக்கிறார்.

“என் கனா யாழ் நீ”, “அகயாழின் குரல்” மற்றும் “உன் கிளையில் என் கூடு” எனும் மூன்று கவிதை நூல்களும் “பாறைக்குளத்து மீன்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன

கண்ணன் ராமசாமி

கண்ணன் ராமசாமி

கார்கவி

கார்கவி

பொறியியல் பட்டம் பெற்ற கார்கவி கவிதை, கட்டுரை, நடனம் ,பேச்சு என கலை இலக்கியப் படைப்பாக்கங்களில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்
கவிதைகளில் ஹைக்கூ உள்ளிட்ட வகைமைகளை எழுதுவதாக தெரிவிக்கும் இவர் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் சில நூல்களை மின் நூலாக வெளியிட்டுள்ளார். அச்சு இணைய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகள் பெற்றுள்ளார்.

காரையன் கதன்

காரையன் கதன்

காரைதீவு;
இலங்கை.

குமாரநந்தன்

குமாரநந்தன்

நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் என படைப்புகள் எழுதி தமிழிலக்கியத்தில் இயங்கி வருகிறார். சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஜே.மஞ்சுளா தேவி

ஜே.மஞ்சுளா தேவி

முனைவர் ஜே. மஞ்சுளா தேவி (1971). வானம்பாடி இயக்கம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கோவை ஞானி, கவிஞர் சிற்பி ஆகியோரை குறித்தான ஆய்வு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது உடுமலைப்பேட்டையில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் இவரது கவிதைகள் பல வெளியாகி இருக்கின்றன.

இவரது கவிதைத் தொகுப்புகள் :

பாப்பாவின் நட்சத்திரம் (2008),

சுற்றிலும் மனிதர்கள் நகர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள் (2016, புதுபுனல் வெளியீடு),

உழத்தி (2020 , கடற்குதிரை வெளியீடு),

இனி ஒருபோதும் கடவுளிடம் பேசமாட்டோம் - கொரோனா கவிதைகள் (2020 , வாசகசாலை பதிப்பகம்)

மருததுரை வைரவன்

மருததுரை வைரவன்

முத்து காந்திமதி

முத்து காந்திமதி

முத்து மீனாட்சி

முத்து மீனாட்சி

திருப்பூரைச் சார்ந்த  முத்து மீனாட்சி உயிர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, ஒரு தனியார்ப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.  கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் ஆர்வமுடைய  இவரது கவிதைகள்  பல்வேறு இலக்கியச் சிற்றிதழ்களில்  வெளியாகி இருக்கின்றன.   இதுவரை வெளியிட்டுள்ள  கவிதைத் தொகுப்புகள்,  1. மௌனம் ஒரு மொழியானால்,  2. கவி தேடும் விழிகள்.   இலக்கிய அமைப்புகளில் இணைந்து இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

 தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளர் விருது,  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய இலக்கியப் படைப்பு ஜீவா விருது‌, தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை வழங்கிய கவிச்சிகரம் விருது, .தளிர் இலக்கிய களம் வழங்கிய கவிச்சுடர் விருது, அக்கினிப் பெண்கள் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாரதிச் சுடர் விருது உள்ளிட்ட  விருதுகளையும் பெற்றிருக்கிறார். அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கம் இந்தியா பிரைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய  ‘200 காப்பிய மாந்தர்கள்’ ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உலக சாதனை நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.

நடுநாட்டுத் தமிழன்

நடுநாட்டுத் தமிழன்

‘நடுநாட்டுத்தமிழன்' எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் இளங்கவி ச வாசுதேவன். முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி; தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர், பேச்சாளர், கவிஞர். முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பரிசும் விருதும் பெற்றவர். மழைக்காலப்பூக்கள், மரபுவெளி, நிணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தெருக்கூத்துக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.தொடர்ந்து பண்பாட்டு கலை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள தமிழ்ப் பற்றாளர்.

நலங்கிள்ளி

நலங்கிள்ளி

தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறு வயது முதலே பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்தாக தெரிவிக்கிறார்.,

சிறுவர்மணி, பிறகு முத்தாரம், தேவி, கல்கி, ராணி, ராணி முத்து, பாக்யா, பாவையர் மலர்,‌ ஆனந்தவிகடன், குங்குமம், கணையாழி, உயிர்மை, உயிர் எழுத்து உள்ளிட்ட இதழ்களிலும் இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி இருகின்றன. இது வரை மூன்று கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்

1. வினவக் கண் விழித்தேன் ,
2. அவளில்லாத சனி ஞாயிறு ,
3 . காற்று வாங்கப் போனேன் ,

மேலும், இவர் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி; பாடலாசிரியராகவும் செயல்படுகிறார்.

நந்தன் கனகராஜ்

நந்தன் கனகராஜ்

விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தை சார்ந்தவர். தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், ஆலோசகர் பணியிலுள்ளார். "அகாலத்தில் கரையும் காக்கை" என்ற கவிதை நூல் வெளியாகி உள்ளது. பல்வேறு இதழ்களில் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

நீலவாணை இந்திரா

நீலவாணை இந்திரா

இயற்பெயர் பாக்கியராசா மிதுர்ஷன். நீலாவணை இந்திரா எனும் புனைபெயருடன் படைப்புகளை எழுதிவருகிறார். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு மாணவர்

நிம்மி சிவா (கண்ணம்மா )

நிம்மி சிவா (கண்ணம்மா )

நிம்மி சிவா என்ற பெயரில் அறிமுகமாகி, தற்போது கண்ணம்மா என்று அழைக்கப்படும் இவர் ஈழத்தில் பருத்தித்துறையை சார்ந்தவர், தற்போது ஜெர்மனியை வாழ்விடமாக கொண்டிருக்கிறார்.

அகநாழிகை பதிப்பகம் மூலம் ‘என் வானிலே’ , யாவரும் பதிப்பகம் .‘ கிழிந்து போன டயரியின் குறிப்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கிறது.

கல்கி இதழில் இவர் எழுதிய சிறுகதையும், ஜெர்மனி பற்றிய தொடர் கட்டுரையும் வெளியாகி இருக்கிறது.
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி, கருமாண்டி ஜங்ஷன் நடத்திய வெங்கட்சாமி நாதன் சிறுகதைப் போட்டி, ராம. செ.சுப்பையா நினைவுச் சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் இவர் எழுதிய சிறுகதைகள் பரிசு பெற்றிருக்கின்றன.

பா.மகாலட்சுமி

பா.மகாலட்சுமி

மதுரையை சார்ந்த பா.மகாலட்சுமி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்& கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டக் குழுவிலுள்ளார். இதுவரை இவரின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

1. குளத்தில் மிதக்கும் சிறகு,
2. கூழாங்கற்கள் உருண்ட காலம்

பவித்ரா பாண்டியராஜூ

பவித்ரா பாண்டியராஜூ

சென்னையில் பிறந்த பவித்ரா பாண்டியராஜூ தற்போது பெரம்பலூரில் வசிக்கிறார். விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கவிதைகள் மீதிருக்கும் காதலின் காரணமாகத் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘மிக நீண்ட உடலின் துயரம்’ எழுத்து பதிப்பகம் வெளியிட்டது. இவரின் கவிதைகள் பல்வேறு இணைய இதழ்கள் மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு சங்கர்

ப்ரியா ரஞ்சன்

ப்ரியா ரஞ்சன்

செ.புனிதஜோதி

செ.புனிதஜோதி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சார்ந்த புனிதஜோதி தற்போது வசிப்பது சென்னையில் . M.A பட்டதாரியான இவர், இதுவரை
நான்கு புள்ளிகளும் நான்பது கோலங்களும், சுப்புவின் கனாமகள், நிழல்களின்இதயம்,மௌனக்கூத்து ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு தொகுப்பு நூல்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

கணையாழி, கொலுசு, நவீனவிருட்சம், படைப்பு கல்வெட்டு , வல்லினச்சிறகுகள், இனிய உதயம் உள்ளிட்ட இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன.

கவிதைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார், பல்வேறு தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட கவியரங்க நிகழ்வுகளிலும், பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கவிதைகள் வாசித்ததோடு பல்வேறு இலக்கிய அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளார்.

புதிய மாதவி

புதிய மாதவி

புதியமாதவி- மும்பை தமிழ்ச் சமூகத்தின் நான்காவது தலைமுறை தமிழர். மும்பை பன்னாட்டு வங்கியில் 22 ஆண்டுகள் பணி செய்து விருப்ப ஓய்வுப் பெற்றவர். சிறுகதை ,நாவல், கவிதை, மொழியாக்கம் , இலக்கிய விமர்சனம், சமகால அரசியல் என தன் எழுத்தே இயக்கமாகக் கொண்டு பயணிப்பவர் .

எஸ்.ராஜகுமாரன்

ரம்யா அருண் ராயன்

ரம்யா அருண் ராயன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி. ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி”- ஐ வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பா.ரேவதி .

பா.ரேவதி .

சிங்கப்பூரில் ஆசிரியப் பணியிலுள்ள இவர் இலக்கியத்தில் குறிப்பாக கவிதை வாசிப்பில் அதிக ஆர்வம் உள்ளவராக திகழ்கிறார். கல்லூரி நாட்களில் ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் என்று ஒரிரண்டு கவிதைகள் பிரசுரமாகி உள்ளது. சிங்கப்பூரில் வெளிவரும் தி சிராங்கூன் டைம்ஸ் பத்திரிக்கையில் இவர் எழுதிய கவிதைத் தொகுதி குறித்தான விமர்சனக்கட்டுரையை வெளியாகி இருக்கிறது. பல்வேறு மொழிகளிலிருந்து கவிதைகள் இவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகி வருகின்றன.

ரிஸ்மியா யூசுப்

ரிஸ்மியா யூசுப்

இலங்கையின் வெளிமடை பிரதேசத்தைச் சார்ந்த ரிஸ்மியா யூசுப் அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பேராதனைப் பல்கலைகழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டத்தையும் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ”சொல்லில் சரியும் சுவர்கள்” தமிழ்நாட்டிலுள்ள கடல் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி உள்ளது.

மகேஷ்

மகேஷ்

சென்னையை சேர்ந்த மகேஷ் மத்திய அரசு ஊழியராக உள்ளார். சிறு வயது முதலே கவிதைகள் எழுதி வருவதாக தெரிவிக்கும் இவரின் கவிதைகள் பல்வேறு இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

ச.ப்ரியா

ச.ப்ரியா

தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலையை சார்ந்த ச.ப்ரியா ‘ஓவியங்கள் வழியும் தூரிகை’ கவிதைத் தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர். பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களுக்கான உரிமைகளை மீட்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பங்களிப்புகளை செய்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களின் தமிழில் மொழிபெயர்ப்பவராகவும் உள்ள இவர்; விளம்பர படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணிபுரிகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொள்ளாச்சி கிளை துணைத் தலைவராக உள்ளார். ப்ரியா சந்திரன் எனும் இவரது யூ-டியூப் சேனல் மூலமாக பல கவிஞர்களின் கவிதைகளை வெகுஜன மக்களுக்கு கொண்டுச் செல்லும் பணியையும் செய்து வருகிறார். இவரின் சமீபத்திய “அனலிக்கா” கவிதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சக்தி ஜோதி

சக்தி ஜோதி

சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி, 2021 ஆம் ஆண்டில் கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும்.

அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.

சமீ பாத்திமா (சமீரா)

சமீ பாத்திமா (சமீரா)

இலங்கையைச் சேர்ந்த சமீரா தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவது பிடிக்கும் எனவும் தான் துறை சார் கவிஞர் அல்ல. ஆனால் கவிதை சில பேசாத உணர்வுகளுக்கும் உருவம் கொடுக்கிறது என நம்புவதாகவும் தெரிவிக்கிறார்.

செல்வ சங்கரன்

செல்வ சங்கரன்

செல்வசங்கரன் ( பி. 1981 ). விருதுநகரில் வசித்து வருகிறார். கல்லூரியொன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணி. 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார். ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் ( 2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் ( 2022), மத்தியான நதி ( 2022) ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார்.

சாகிப்கிரான்

சாகிப்கிரான்

கவிஞர் வே.பாபுடன் இணைந்து “தக்கை” எனும் அமைப்பை நிறுவிய கவிஞர் சாகிப்கிரான், சேலத்தில் கணினி நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர் தொண்ணூறுகளிலிருந்து இலக்கியத்தில் இயங்கி வருகிறார். தக்கை சிற்றிதழ் நடத்தியதோடு, பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை தக்கை அமைப்பு உடன் செயல்பட்டவர். வண்ணச் சிதைவுகள், அரோரா உள்ளிட்ட நூல்கள் இவரின் எழுத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளாகும். இவர் எழுதிய மொழிபெயர்ப்புகள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளும் கவனத்திற்குரியவை.

ஷமீலா யூசுப் அலி

ஷமீலா யூசுப் அலி

பெண்களை மையமாக கொண்டு இயங்கும் பெம் ஏசியா ( FemAsia Magazine) இதழை இங்கிலாந்திலிருந்து நடத்தி வருகிறார் ஷமீலா யூசுப் அலி.

தன் எழுத்துக்கள் மூலம் சுயம், அடையாளம் போன்ற விடயங்களை ஆராய விரும்புவதாகவும், . கடந்த காலத்தையும் நினைவுகளையும் எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் முடிவற்ற சாத்தியக் கூறுகளின் வெளியாக இனங்காண்பதாக கூறும் ஷமீலா யூசுப் அலி, தனது எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள உலகின் அழகுக்கான மெச்சுதலுடன் வாழ்தலின் சாரத்தை வெளிக்கொணர முயல்வதாகவும் குறிப்பிடுகிறார்.

சங்கரி சிவகணேசன்

சங்கரி சிவகணேசன்

இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள புத்தூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.
'உன் நிலம் நோக்கி நகரும் மேகம்" எனும் கவிதைத் தொகுப்பு மற்றும் பெண்களின் மனவோட்டத்தை கவிதைகளாய் கூறும் "அரூப நிழல்கள்" எனும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

சிலம்புச்செல்வன்

சிலம்புச்செல்வன்

இவரது இயற்பெயர் சிவச்சந்திரன். சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம். கடந்த முப்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி , தற்போது சொந்தத் தொழில் செய்து வருகிறார். இலக்கிய விமர்சனம் மற்றும் கவிதை எழுதுவதில் ஈடுபட்டு வருகிறார்.

சித்துராஜ் பொன்ராஜ்

சித்துராஜ் பொன்ராஜ்

சிங்கப்பூரில் வசிக்கும் சித்துராஜ் பொன்ராஜ் . இதுவரை தமிழில் 'பெர்னுய்லியின் பேய்கள்' (அகநாழிகை, 2016) 'விளம்பர நீளத்தில் ஒரு மரணம்' (காலச்சுவடு, 2018) ஆகிய நாவல்களையும், 'மாறிலிகள்' (அகநாழிகை, 2015), 'ரெமோன் தேவதை ஆகிறான்' (காலச்சுவடு, 2018) ‘கடல் நிச்சயம் திரும்ப வரும்' (வம்சி புக்ஸ், 2019) , ‘அடுத்த வீட்டு நாய் & இன்னபிற அதிசயம்வற்றாத ஆண் பெண் கதைகள்' (உயிர்மை, 2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

'கதைசொல்லியின் ஆயிரம் இரவுகள்' (யாவரும், 2019) என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.

'காற்றாய்க் கடந்தாய்' (அகநாழிகை, 2015), 'சனிக்கிழமை குதிரைகள்' (பாதரசம், 2017) ,
’இரவுகள் பொதுமக்களுக்கானவை அல்ல’ (உயிர்மை, 2023) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டு உள்ளார்.

உலக மொழிகளிலுள்ள பல இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

2019ல் இவருடைய 'இத்தாலியனாவது சுலபம்' என்ற கவிதைத் தொகுப்பும், 'மரயானை' நாவலும், 2020ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டியில் தமிழ்ப் புனைவு மற்றும் கவிதைப் பிரிவுகளில் முறையே முதல் பரிசினையும் தகுதிப் பரிசினையும் வென்றன.

சிவ பஞ்சவன்

சிவ பஞ்சவன்

நவீன நாடக இயக்குனர், நடிகர், நாடகப் பயிற்றுநர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில் வசித்து வருகிறார். தற்போது பல்கலைக்கழகம் ஒன்றில் நாடகத் துறையில் ஆசிரியராகப் பணிபுரியும் இவரின் கவிதைகள் பல இதழ்களில் வெளியாகி உள்ளது.

ஸ்டாலின் சரவணன்

ஸ்டாலின் சரவணன்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சார்ந்த ஸ்டாலின் சரவணன்; தற்போது புதுகோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் முதுநிலை பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டமும் பெற்றவர்.

1999 ஆம் ஆண்டிலிருந்து எழுத ஆரம்பித்த இவரின் கவிதைகளும் கட்டுரைகளும், ஆனந்த விகடன், காலச்சுவடு, தடம், உயிரெழுத்து, உயிர்மை, கணையாழி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச தலைவர், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர், புதுக்கோட்டை சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் கள செயல்பாட்டாளராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்டாலின் சரவணன் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் ஆகியன குறித்து விரிவாக உரைகள் அளிக்கும் திறன் கொண்டவர். கவிதைப் பயிலரங்குகளின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே நவீன கவிதைகள் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்கிறார்.

"திரையில் விரியும் இந்திய மனம்” என்ற தலைப்பில் இந்திய சினிமா குறித்த ஒரு தொடரை உயிர்மை இணையத்தளத்தில் எழுதியது பெரும் வரவேற்பை பெற்றது.

இது வரை வெளிவந்துள்ள நூல்கள் :
கவிதைத் தொகுப்பு -

தேவதைகளின் வீடு (2014, அகரம் வெளியீடு),
ஆரஞ்சு மணக்கும் பசி (2016, உயிர்மை வெளியீடு),
ரொட்டிகளை விளைவிப்பவன் (2018, உயிர்மை வெளியீடு)

பெற்றுள்ள விருதுகள் :
படைப்புக் குழும விருது- 2019,
சௌமா விருது -2019,
தோழர் சுப்பராயலு நினைவு விருது - 2019

இரா. சுகன்யா

இரா. சுகன்யா

சென்னையைச் சார்ந்த இரா.சுகன்யாவின் கவிதைகள் வளரி கவிதை இதழில் வெளியாகி உள்ளன. சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதாக தெரிவிக்கும் இவர் இலக்கிய நூல்கள் வாசிப்பிலும் நாட்டமுள்ளவர்.

தாமரை பாரதி

தாமரை பாரதி

தொன்னூறுகளின் பிற்பகுதியில் இருந்து நவீன சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருபவர். சல்லிகை என்னும் தீவிர இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டவர்.. இவரது மூன்று கவிதை தொகுப்புகள் தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021 இலங்கையின் ‘மகுடம்’ காலாண்டிதழ் வழங்கும் “பிரமிள் 2021” விருது பெற்றது). காசினிக் காடு (2023). கவிதைத் தொகுப்புகள் குறித்தான விமர்சனங்களைத் தனது KAVIPOTHAM யூ டியூப் சேனல் மூலம் நிகழ்த்தி வருகிறார்.

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்

”மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று”
என நம்பும் யமுனா ராஜேந்திரன் கோவையில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் கோட்பாட்டாளர், சினிமா விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாளராக திகழ்கிறார்.
இலக்கியம், கோட்பாடு, திரைப்படம், அரசியல், கவிதை, மொழியாக்கம் என இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

அ கரீம்

அ கரீம்

கோவையை சார்ந்த அ.கரீம் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார். ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராகவும், ஒடுக்கு முறைக்கு எதிராகவும் தனது கதை மாந்தர்களின் வழியே உரத்துக் குரல் எழுப்பும் கரீம்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில குழுவில் பொறுப்பு வகிக்கிறார்.

இதுவரை இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள்

1. தாழிடப்பட்ட கதவுகள்
2. சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை
3. இருண்ட காலக்கதைகள் – கூட்டுத் தொகுப்பு
4. அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி

"தாழிடப்பட்ட கதவுகள்" நூலிற்காக. .* சுஜாதா உயிர்மை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

அ.ராமசாமி

அ.ராமசாமி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியஅ.ராமசாமி; கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர்.
சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கும் சுற்றுலாப் பயணியாக நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

ஆதன் ஆரா .

ஆதன் ஆரா .

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.

அதீதன்

அதீதன்

அகதா

அகதா

பெரம்பலூரைச் சார்ந்த அகதா தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. இலக்கிய அமைப்புகளிடமிருந்து கவிதைகளுக்கான விருதுகள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.

அகிலா ஸ்ரீதர்

அகிலா ஸ்ரீதர்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசிக்கும் அகிலா ஸ்ரீதர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படத்துறையில் துணை இயக்குநர் என பன்முகத்திறன் கொண்டவர். ஹெர்மன் ஹெஸ்ஸேவின் நாவலை “தீத்தழல்” எனும் தலைப்பிலும், ஷ்ரேயாஸ் பவே-வின் நாவலை”யகுட்ஸ்க் கைதி” எனும் தலைப்பிலும் அகிலா ஸ்ரீதர் மொழிபெயர்த்திருக்கிறார். 2024 -ம் வருடம், இயக்குநர் பாஸ்கர் சக்தியின் இயக்கத்தில் வெளியான “வடக்கன்” திரைப்படத்தில் துணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

அம்பேத்கர் கிட்டு

அம்பேத்கர் கிட்டு

திரைப்பட உதவி இயக்குநர்.

அம்மு ராகவ்

அம்மு ராகவ்

ரவீந்திரன் .

ரவீந்திரன் .

அன்புச்செல்வி சுப்புராஜூ

அன்புச்செல்வி சுப்புராஜூ

தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவையின் தலைவராகவும், அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் அமைப்பின் செயலாளரகவும் உள்ள அன்புச்செல்வி சுப்புராஜூ இதுவரை புதுக்கவிதை, ஹைக்கூ, தன்முனை கவிதைகள், சிறார் கதைகள் வகைமைகளில் பத்தொன்பது நூல்கள் வெளியிட்டு உள்ளார். கம்போடிய அரசு மற்றும் அங்கோர்வாட் தமிழ்ச்சங்கம் இணைந்து வழங்கிய சர்வதேச பாரதியார் விருது, தமிழாழிப் பேரவை கனடா வழங்கிய கலையாழி உள்ளிட்ட சில விருதுகளைப் பெற்றுள்ளார்.

அன்றிலன்

அன்றிலன்

அன்றிலன் எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் இரா.சிவக்குமார். இவரது கவிதைப் படைப்புகள், ஆனந்த விகடன், கணையாழி, குமுதம்- தீராநதி; பேசும் புதிய சக்தி, காமதேனு ; இனிய உதயம், கனவு போன்ற இதழ்களிலும், கோடுகள், வாசகசாலை, தமிழ்நெஞ்சம் படைப்பு- கல்வெட்டு, தகவு, கொலுசு, முதலான மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு "மாயநதியின் கால்தடம்".

அன்னபூர்ணா

அசோக் குமார்

அசோக் குமார்

சேலம் மாநகராட்சியைச் சார்ந்த அசோக் குமார்; தற்போது சென்னை சுங்கத்துறையில் பணி புரிகிறார். சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
கரிகாலனின் வரலாற்றை பின்புலமாக கொண்டு ‘சோழவேங்கை கரிகாலன்’ எனும் நாவல் இரண்டு பகுதிகளாகவும், இதன் தொடர்ச்சியாக ‘இமயவேந்தன் கரிகாலன்’ எனும் நாவலும் எழுதி இருக்கிறார். பறம்புத் தலைவன் பாரி அசோக் குமார் எழுதிய மற்றொரு நாவலாகும்.

அதிதி

அதிதி

பின்னி மோசஸ்

பின்னி மோசஸ்

குமரி மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டிய ‘திருத்துவபுரம்’ ஊரைச் சார்ந்தவர் பின்னி மோசஸ் .தமிழ்த் திரைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றுகிறார். ‘நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து’, ‘மேக்தலினா’ ‘தெங்கு’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

டீன் கபூர்

டீன் கபூர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மருதமுனைக் கிராமத்தைச் சார்ந்த இவர் தற்போது ஆசிரியராக பணிபுரிகிறார். "டீன் ஆட்ஸ்" எனும் பெயரில் விளம்பரத்திற்கான பலகை ஓவிய வடிவமைப்பு தொழிலும் செய்யும் இவரின் குரோட்டன் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019) என மூன்று கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

கு.இரா. தரன்

கு.இரா. தரன்

கு.இரா. தரன் சென்னையைச் சார்ந்தவர். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்பும் , முனைவர் பட்டமும் பெற்றவர். பட்டத்தாரி, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல், பரமபத விளையாட்டு , சண்டக்காரி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர். இவற்றோடு இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு (Raja One Man Show) வசனமும், விளம்பரபடங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார். இளம்பாரதி விருது, மாசிலா விஜயா விருது தமிழ்க் கவிஞர் விருது, யுவஸ்ரீ கலா விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

டிலோஜினி

டிலோஜினி

திவ்யா ஈசன்

மின்ஹா

மின்ஹா

ஜே.பிரோஸ்கான்

ஜே.பிரோஸ்கான்

ஏரா மகள். ஜீ சுமித்ரா

ஏரா மகள். ஜீ சுமித்ரா

இலங்கை நாட்டிலுள்ள திருக்கோணமலையில் பிறந்து வளர்ந்த சுமித்ரா போர்ச்சூழலால் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் தற்போது வசித்து வருகிறார். தமிழ்மீது கொண்ட பற்றினால் தஞ்சாவூர் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் பட்டயக்கல்வியைத் பயின்ற இவர் பிரான்ஸில் புலம்பெயர் தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடசாலையில் தமிழ்மொழி ஆசிரியராக பதின்மூன்று ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார். முகநூலிலும் இணைய இதழ்களிலும் கவிதைகள் எழுதி வரும் இவர்; மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீது அதிக ரசனையும், அதன் பிறிதுபட்ட மொழிநடையும் பிடிக்கும் என்றும், இசையைவிட இலக்கியங்கள் மீது அதிக ரசனை என்றும் தெரிவிக்கிறார்.

இரா.கோமதிசங்கர் .

இரா.கோமதிசங்கர் .

எழுத்தாளர்.

ஜி.ஏ. கௌதம்

ஜி.ஏ. கௌதம்

திரைத்துறையில் படத்தொகுப்பாளராக பணிபுரியும் ஜி.ஏ.கெளதம், எழுத்தின் மீதுள்ள தீவிர ஆர்வத்தினால் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதாக தெரிவிக்கிறார் . குங்குமம் இதழில் இவரின் சிறுகதையும் , எனது நேர்காணலும் வெளிவந்துள்ளது. ஆனந்த ஆனந்த விகடன் இதழ் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆகியவற்றில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி உள்ளது.

ஹேமா

ஹேமா

சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது முதல் புத்தகமான ‘வாழைமர நோட்டு’, சிங்கப்பூர் இலக்கிய பரிசு 2020, படைப்பு இலக்கிய விருது, திருப்பூர் சக்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் கவிதைகள், தங்கமுனை விருது, சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி, படைப்பு.காம் நடத்திய மகளிருக்கான சர்வதேசக் கவிதைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது கதைகள் கணையாழி, கல்கி, சிராங்கூன் டைம்ஸ், தமிழ் முரசு, கனலி, வல்லினம், அரூ, திண்ணை, மலைகள்.காம் உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன.

ஹேமி கிருஷ்

ஹேமி கிருஷ்

அய்யப்ப மாதவன்

அய்யப்ப மாதவன்

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர். இவர் இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருகிறார்.

தீயின் பிணம் (முதல் கவிதை தொகுப்பு – 1988),
மழைக்கு பிறகு மழை,
நான் என்பது வேறு ஒருவன்,
‘நீர் வெளி,
பிறகு ஒரு நாள் கோடை,
எஸ். புல்லெட்,
நிசி அகவல்,
சொல்லில் விழுந்த கணம்,
மெதுவாய் நகர்கிறது காற்று,
பனியிரவுப் பொழுதுகள்,
புதனின் விரல் பற்றிய நகரம்,
காற்றும் சிற்சிறு இலைகளும்,
ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்,
உரையாடலில் பெரும் மழை,
சாமபல் காமுகன்,
உள் மரம்,
ஊர்தி மிதக்கும் கடல்,
யாமினிக்கு ஒரு கடிதம் (உரைநடை கவிதை),
தீயின் பிணம்,
குவளைப் கைப்பிடியில் குளிர்காலம்,
குரல்வளையில் இறங்கும் ஆறு,
பாலும் மீன்களும்
உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்களும்

தானாய் நிரம்பும் கிணற்றடி,
பூட்டு,
தொந்தி கணபதியின் வாகனம்,
பருவமழைப் போல பெய்கிறது கண்ணீர்,
மிட்டாய்ச் சிறுமி,
கணங்களின் விபரீதங்கள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பு நூல்களும் எழுதியுள்ளார்.

Dr. ஜலீலா முஸம்மில் .

Dr. ஜலீலா முஸம்மில் .

இலங்கை நாடு ஏறாவூர் நகரில் வைத்திய அதிகாரியாகப் பணிபுரியும் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் இதுவரை மூன்று நூல்களை வெளியீடு செய்துள்ளார்.
1) சிறகு முளைத்த மீன் -புதுக்கவிதை நூல்,
2)தூரிகை வரையும் மின்மினிகள்-ஹைக்கூ கவிதை நூல் ,
3) மஞ்சள் மாம்பூ - ஹைக்கூ கவிதை நூல்).

இலக்கியப் பணியில் மிகவும் ஆர்வத்துடன் செயல்படும் இவர் பல்வேறுபட்ட விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இலங்கை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் 2023ஆம் ஆண்டுக்கான இளங்கலைஞர் விருது பெற்றவர். அண்மையில் மதுரை மாநகரில் இடம்பெற்ற மூன்றாவது தமிழ் ஹைக்கூ உலக மாநாட்டில் ஹைக்கூ பேரொளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனனி அந்தோணிராஜ்

ஜனனி அந்தோணிராஜ்

எஸ்.அந்தோணி ராஜ் "ஜனனி அந்தோணிராஜ்" என்ற பெயரில் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள்
எழுதி வருகிறார். திருச்சி அகில இந்திய வானொலி நிலைய பண்பலை பிரிவில் பகுதி நேரமாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் பிரசுரமாகி உள்ளன. தற்போது கல்வித்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற இவர், நாவல்களை எழுதி வெளியிட காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஜான்ஸி ராணி

ஜான்ஸி ராணி

உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் படித்தவர். மனநலம், வாழ்வியல், வணிகம், மெட்டாஃபிஸிக்ஸ் என பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் தமிழின் முன்னணி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூரில் பிறந்த இவர் தற்போது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் சென்னையில் வசிக்கிறார்.
இவரின் நூல்கள் :

"ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்" - கவிதைத் தொகுப்பு - வாசகசாலை பதிப்பகம் - 2019

"ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்" அராபிய பெண்ணியச் சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு - எதிர் வெளியீடு - 2021

ஜெயநதி .

ஜெயநதி .

கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், பேசும் புதிய சக்தி போன்ற இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

ஜீவன் பென்னி

ஜீவன் பென்னி

ச்ஜேஸூ ஞானராஜ்

ச்ஜேஸூ ஞானராஜ்

ச்ஜேஸூ ஞானராஜ். இவர் ஜெர்மனியில் கணினித் துறையில் பணிபுரிகிறார். இளவயது முதலே கதை, கவிதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். கல்லூரியில் படிக்கும் போதே பல கவிதைகள் எழுதி பரிசுகள் வாங்கியுள்ளார். இவரின் பல சிறுகதைகள் விகடன் இணையத் தளத்தில் வெளிவந்துள்ளது. "ஜெர்மனியை சுற்றிபார்க்கலாம் வாங்க" என்ற இவரின் ஐந்து வார தொடர், தினமலர் இணையத் தளத்தில் வெளியானது. ஜெர்மனியில் தொழில் புரியும் வளர்ந்து வரும் தமிழ் தொழிலதிபர்களை பேட்டி கண்டு விகடனில் எழுதியுள்ளார். இவரின் 'ஈட்டி குத்திய பேராசை' என்ற சிறுகதை, பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜோதி சரண்

ஜோதி சரண்

தேனி மாவட்டம்- கம்பத்தை சார்ந்த ஜோதி சரண் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் “Kanitham with koffee எனும் காணொளிச்சேனல் தொடங்கி கணிதம் கற்றுத்தரும் ஆசிரியராக பணிபுரிகிறார். இது வரை மலர்கள் தீட்டிய வரைவுகள், இமயம் தொடும் இயைபுகள், நிழல் உதிர்க்கும் இலைகள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்பு நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு அச்சு மற்று இணைய இதழ்களில் இவரின் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.

தி.கலையரசி

தி.கலையரசி

சென்னையில் வசிக்கும் தி.கலையரசி பல் மருத்துவராக உள்ளார் .இதுவரை ‘நான் உன்னுடைய துறவி’ , ‘உன் பொய்களில் உண்மையாகிறேன்’( கஸல் வகைமை ), ‘நீ காதல் நான் கஸல்’( கஸல் வகைமை என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களில் இவரின் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. " தமிழில் கஸல் எழுதும் முதல் பெண் கவிஞர் " என ‘குமுதம் சிநேகிதி’ இதழ் இவரை அடையாளப் படுத்தியிருக்கிறது.

ப.காளிமுத்து

ப.காளிமுத்து

தமிழ்நாட்டிலுள்ள பொள்ளாச்சியைச் சார்ந்தவர். பொள்ளாச்சி அருகிலுள்ள பில்சின்னாம்பாளையம் என்ற கிராமம் இவருடைய சொந்த ஊராகும். 2022 ஆம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்” நூலுக்காக பெற்றுள்ளார்.

கலியமூர்த்தி

கலியமூர்த்தி

திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர். திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரியும் கலிய மூர்த்தி இது வரை ஏழு கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.

மேகலா கருப்பசாமி

மேகலா கருப்பசாமி

இயற்பெயர் மேகலா கருப்பசாமி. கவிதைகள் மீது அதிகம் நாட்டம் கொண்டவரான இவர் கம்பரின் காதலி என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் கவிதைகளை வாசித்து பதிவு செய்து வருகிறார்.

கண்மணி ராசா

கண்மணி ராசா

கார்குழலி

கார்குழலி

கார்த்திகா முகுந்த்

கார்த்திகா முகுந்த்

பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார்.

தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தியுள்ளார்.

பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்.

Knitting ஆடை வடிவமைப்பு, புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள்.

வெளியாகியுள்ள நூல்கள்:

• இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு

• குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு

• ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு

• துமி (2022) - கவிதைத் தொகுப்பு.

கார்த்திகேயன் மாகா

கார்த்திகேயன் மாகா

கருணாகரன் .

கருணாகரன் .

இலங்கையின் வடக்கிலுள்ள இயக்கச்சியில் பிறந்தவர். தற்போது கிளிநொச்சியில் வசிக்கிறார்.

இதுவரையில் வெளியான கவிதைத் தொகுப்புகள்:
ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள், நெருப்பின் உதிரம், படுவான்கரைக் குறிப்புகள், இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள், உலகின் முதல் ரகசியம், நினைவின் இறுதி நாள், கடவுள் என்பது துரோகியாயிருத்தல், மௌனத்தின் மீது வேறொருவன், இரவின் தூரம், அருளப்பட்ட மீன், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இரண்டு செயலிகள், நீர்மேடு.

சிறுகதைகள்: வேட்டைத்தோப்பு

கட்டுரைகள்: இப்படி ஒரு காலம், அன்பின் திசைகள், எதிர்

மொழிபெயர்ப்பு : சிங்களத்தில் Mathaka Wanniya (வன்னி நினைவுகள்)

கருவை ந.ஸ்டாலின்

கருவை ந.ஸ்டாலின்

கரூரைச் சார்ந்த கருவை. ந.ஸ்டாலின் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார் . ‘ஆதன்’ எனும் பெயரில் பதிப்பகத்தை நடத்தி வரும் இவர்; ‘பெருந்துணைத் தேறல்’ என்னும் கவிதைத் தொகுப்பு வெளியிட்டு உள்ளார்.

கவி கார்த்திக்

கவி கார்த்திக்

கீர்த்தி கிருஷ்

கீர்த்தி கிருஷ்

இலங்கை திருகோணமலையைச் சார்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
புதுக்கவிதைகள் ஹைக்கூகள் மற்றும் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்க்கும் இவரின் படைப்புகள். பல பிரபல இதழ்களில் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
"வெளிச்சக் குளத்தின் நீர்த்தாரைகள்" எனும் முதல் கவிதை நூலை வெளியாகி இருக்கிறது.

கோவை ஆனந்தன்

கோவை ஆனந்தன்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு குமாரபாளையம் கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கோவையிலுள்ள அரசு தொழிற்பயிற்சி முடித்த பிறகு நான் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார்.

முன்னாள் குடியரசுதலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் இவரின் கவிதையை வாசித்து வாழ்த்துகடிதம் அனுப்பியதாக தெரிவிக்கும் இவரின் கவிதைகள் பல இலக்கிய சிற்றிதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.

லக்ஷ்மி

லக்ஷ்மி

சென்னையைச் சார்ந்த லக்ஷ்மி தமிழ்நாட்டு அரசின்தலைமைச் செயலகத்தில் அலுவலராக பணிபுரிகிறார். புத்தகங்கள் வாசிப்பதும், கவிதைகள் சிறுகதைகள் எழுதுவதும் மிகவும் விருப்பத்திற்குரியது எனக் கூறும் இவரின் கவிதைத் தொகுப்புகள் இரண்டு வெளியாகி உள்ளன.

லார்க் பாஸ்கரன்

லார்க் பாஸ்கரன்

லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிஞ்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் வரைகலைத் தொழில்நுட்பக் கலைஞரான இவர்; தற்போது
திரைப்பட இயக்கம் சார்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன

லதா அருணாச்சலம்

லதா அருணாச்சலம்

சென்னையைச் சேர்ந்தவர். முதுகலை ஆங்கிலம் மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர். நைஜீரியா தேசத்தின் லாகோஸ் நகரில் வசித்து வருபவர் . இவரது முதல் நூல் “உடலாடும் நதி” கவிதைத் தொகுப்பு (எழுத்து பிரசுரம்) இரண்டாவது நூல் எழுத்து பிரசுரம் வெளியிட்ட ”தீக்கொன்றை மலரும் பருவம்” மொழிபெயர்ப்பு நாவல் (மூல ஆசிரியர்: நைஜரீய எழுத்தாளர் அபுபக்கர் ஆடம்). 2022- ஆம் ஆண்டு நூல் வனம் வெளியீடாக ஆக்டோபஸின் பேத்தி -மொழிபெயர்ப்பு சிறுகதைகள், காலச்சுவடு வெளியீடாக “பிராப்ளம்ஸ்கி விடுதி” – நாவல் (மூல ஆசிரியர்: பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்) , 2023 -ஆம் ஆண்டு சால்ட் பதிப்பக வெளியீடாக ”ஆயிரத்தொரு கத்திகள்” (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) ஆகிய நூல்கள் வெளியாகி இருக்கிறது.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களிலும் இவரது சிறப்பான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தீக்கொன்றை மலரும் பருவம் நாவலுக்கான மொழிபெயர்ப்பு தமிழ் வாசகப் பரப்பில் அதிக கவனத்தை பெற்றது. இந்த நாவலுக்காக விகடன் விருதும், வாசகசாலை விருதும் பெற்றிருக்கிறார்.

ரிஷி

ரிஷி

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கடந்த 40 வருடங்களாக நவீன தமிழ் இலக்கிய வெளியில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதிவரும் லதா ராமகிருஷ்ணன் அநாமிகா என்ற புனைபெயரில் கதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும் எழுதுபவர். .

இதுவரை 1.அலைமுகம், 2.என்உனக்கு, 3..மற்றும் சில திறவாக் கதவுகள், 4.காலத்தின் சில தோற்ற நிலைகள், 5.வாக்கு, 6.அன்பின் பெயரால், 7.காலநிலை, 8..போகிற போக்கில், 9. இப்போது, 10. அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள், 11.தனிமொழியின் உரையாடல், 12.உள்வெளி, 13.குறுக்கு வழிகளற்ற நெடுந்தொலைவு, 14. எதிர்வினை, 15. வரியிடைவரிகள், 16.சொல்லடி சிவசக்தி, 17.புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக் கும் கண்ணீர்த்துளி, 18. RAIN BEYOND AND OTHER POEMS _ ஆகிய பதினெட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

முதல் நான்கு தொகுப்புகள் உள்ளங்கையுலகு – பாகம் 1 என்பதாக புதுப்புனல் பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புகள் செய்துவரும் இவர் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதியுள்ளார்; மொழி பெயர்த்துள்ளார். WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்னல அமைப்பின் அங்கத்தினராக, பார்வையற்றவர்கள் எழுதிய படைப்புகளையும், பார்வையற்றவர்களைப் பற்றி எழுதப் பட்டவற்றையும் நூலாக்கம் செய்து ஆவணப்படுத்தும் பொறுப்பில் இருக்கிறார்.

பேஸ்புக் நட்புவட்டத்தில் சக கவிஞர்கள் எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிவேற்றிவருகிறார்.

1957, நவம்பரில் பிறந்தவர் . ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. 28 வருடங்கள் அரசுப்பணியில் இருந்து பின் விருப்ப ஓய்வு பெற்றவர்.

கோ.லீலா

கோ.லீலா

திருக்குவளையை பூர்வீகமாக கொண்ட கோ.லீலா, தற்போது பொள்ளாச்சியில் வசிக்கிறார். தமிழக அரசு பொதுப் பணித்துறையில் நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளராக பணிபுரியும் இவர் எழுதிய, சூழலியல் சார்ந்த ‘மறைநீர்’ நூலை ‘படைப்பு’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நூல் பலரது கவனத்தையும் பல விருதுகளையும் பெற்றுள்ளது. இயக்குநர்/ கவிஞர் பிருந்தா சாரதியின் ஹைக்கூ கவிதைகளை முன்வைத்து இவர் எழுதிய “ஹைக்கூ தூண்டிலில் ஜென்” எனும் கட்டுரைத் தொகுப்பு நூலும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அச்சு மற்றும் இணைய இதழ்களில் கோ.லீலா எழுதிய கவிதைகள், கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.

மதுசூதன்

மலர்விழி இளங்கோவன்

மலர்விழி இளங்கோவன்

இவர் சிவகங்கை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிங்கப்பூரில் பதினைந்து ஆண்டுகள் புலம் பெயர்ந்து வாழ்ந்த பின்; தற்போது திருச்சியில் வசிக்கிறார். கோவையில் உயிர்வேதியியல் பயின்றவர். மூன்று கவிதைத் தொகுப்புகளையும் (கருவறைப் பூக்கள், அலை பிடுங்கிய சொற்கள், கடல் சூழ் கவிதை), ஒரு சிறுகதைத் தொகுப்பையும் (சொல்வதெல்லாம் பெண்மை) வெளியிட்டுள்ளார். கவிதை, கதை என இரு பிரிவுகளிலும் சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்றத்தின் 'தங்க முனை விருது' வென்றவர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா போட்டியின் பரிசுகளை மரபுக் கவிதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தின் 'இலக்கியச் சாரல்' லில் இவர் கவிதை இடம்பெற்றுள்ளது. கவிமாலையின் 'சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்க விருது ‘அலை பிடுங்கிய சொற்கள்' நூலுக்காக வென்றார். அதே நூல் 'சிங்கப்பூர் இலக்கிய பரிசு’க்கும் தேர்வு பெற்றது.

ஷெண்பா

ஷெண்பா

மஞ்சுநாத்

மஞ்சுநாத்

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] - அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.

மனோஹரி

மனோஹரி

மனோஹரி (மனோஹரி மதன்) ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் மற்றும் பி.எட்., பட்டம் பெற்றவராக இருந்தாலும்; தமிழ் மீது உள்ள காதலால் தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார்.கல்கி ,அவள் விகடன், இனிய உதயம், காணிநிலம் மற்றும் பல இணைய இதழ்களான வளரி, காற்றுவெளி, பட்டாம்பூச்சி, திண்ணை, கவிஓவியா ஆகியவற்றில் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இது வரை ஐந்து கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரது "சிறகில் விரியும் காடு" என்னும் கவிதை நூல் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுச்சூழலை பேணிக் காப்பதின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் படிப்பவர்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்பட்ட கவிதைகள். 2022 இலக்கிய மேடை
விருதைப் பெற்றது. தஞ்சையில் பிறந்த இவர் தற்போது வசிப்பது சென்னையில்.

மனுஷி

மனுஷி

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சார்ந்த மனுஷி-யின் இயற்பெயர் ஜெயபாரதி. தற்போது இவர் புதுச்சேரி பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். யுவ புரஸ்கார் (இளம் சாகித்ய அகாடமி) என்னும் தேசிய அளவிலான விருதினை 2017-ஆம் ஆண்டில் பெற்றவர். இவரது படைப்பான ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் என்னும் நூலே இவருக்கு இந்த விருதினைப் பெற்றுக் கொடுத்தது. முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இதுவரை எழுதியுள்ள நூல்கள்:
குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்-மித்ரா பதிப்பகம் (2013),
முத்தங்களின் கடவுள்-உயிர்மை பதிப்பகம் (2014),
ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்-உயிர்மை பதிப்பகம், (2015),
பின்பற்றவிரும்பும் கவிஞர்---கவிஞர் இளம்பிறை,
கருநீல முக்காடிட்ட புகைப்படம் - வாசகசாலை பதிப்பகம் (2019),
யட்சியின் வனப்பாடல்கள் - வாசகசாலை பதிப்பகம் (2019)

லைலா (மாராணி)

லைலா (மாராணி)

அருப்புக்கோட்டை ஊரைச் சார்ந்த மாராணி ’லைலா’ எனும் புனைபெயரில் கவிதைப் படைப்புகள் எழுதி வருகிறார், இவரின் படைப்புகள் மகாகவி இதழ் , இனிய உதயம், ஆனந்த விகடன் உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.

மதார்

மதார்

மதார் - நெல்லையைச் சேர்ந்தவர். தற்போது ஈரோட்டில் பணிபுரிகிறார். 'வெயில் பறந்தது' இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்புக்காக 2021ஆம் ஆண்டுக்கான 'விஷ்ணுபுரம் - குமரகுருபரன்' விருது இவருக்கு வழஙகப்பட்டது.

ச .மோகனப்ரியா

ச .மோகனப்ரியா

சொந்த ஊர் கோயம்புத்தூர். படித்தது பொறியியலில் தகவல் தொழிற் நுட்பம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசிக்கிறார். 2007 முதல் வலைப்பூவில் புனைப்பெயரில் படைப்புகள் எழுதி வருகிறார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என இவரது படைப்புகள் தமிழக, மலேசிய மற்றும் சிங்கப்பூரின் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியாகியிருக்கிறது.

தமது கவிதைகளுக்காக சிங்கப்பூர் கவிதைத் திருவிழாவின் தேசிய அளவு போட்டிகளில் வென்றிருக்கிறார். 2021இல் நடந்த சிங்கப்பூர் தங்கமுனை போட்டியில் கவிதை பிரிவில் மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. 2023 இல் சிங்கப்பூர் தங்கமுனைப் போட்டியில் கவிதைப் பிரிவிலும் சிறுகதைப் பிரிவிலும் இரண்டாம் பரிசு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் “ஞாபகப் பெருங்களிறு” என்ற தமது முதல் கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார்.

மா.ச. இளங்கோமணி,

மா.ச. இளங்கோமணி,

பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி உதவிப் பேராசிரியராக பணியாற்றும் இளங்கோமணியின் “காது வளர்த்தல்” எனும் புத்தககம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் வெளி வந்துள்ளது.
இவர் எழுதிய கட்டுரைகள் கனலி, காலச்சுவடு, கீற்று, பெயல் ஆகிய இதழ்களில் வெளியாகி இருக்கிறது.

முபராக்

முபராக்

முகிலன் .

முகிலன் .

முகிலா முத்தையா

தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சார்ந்த முகிலாவின் கவிதைகள் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.

நண்பன் G மணி

நண்பன் G மணி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சார்ந்தவர். இவரின் கவிதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கின்றன.

நரேன் கெளரி

நரேன் கெளரி

இமையாள் .

இமையாள் .

கவிஞர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இயங்கி வரும் நர்மதா குப்புசாமியின் புனைபெயர் ‘இமையாள்’

: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் “நிரந்தரக் கணவன்” எனும் பெயரிலும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் “சின்ட்ரெல்லா நடனம்” எனும் பெயரிலும் இவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளன. இமையாள் எனும் பெயரில் “ஆண்கள் இல்லாத வீடு” எனும் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

நட்சத்திரா

நட்சத்திரா

நீரை மகேந்திரன்

நீரை மகேந்திரன்

ப.தமிழ்ச்செல்வன்

ப.தமிழ்ச்செல்வன்

அருணந்திசிவம் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் ப.தமிழ்ச்செல்வன்; கணிப்பொறி அறிவியல் துறையில் முதுகலைப்
பட்டமும், இதழியல் மற்றும் மக்கட்தொடர்பியலில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்று, முதுகலை கணினி ஆசிரியராக நயினார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். புகவு பதிப்பகத்தை தொடங்கி
நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

உனக்குள் அடங்கிய நான், மூடப்படாமலிருந்த கதவு, புணர்தலும் நிமித்தமும் ஆகிய தலைப்புகளில் இவரது 3 கவிதை தொகுப்புகள் 2006 –2008 காலங்களில் வெளிவந்துள்ளது. இவரது நான்காவது கவிதைத்தொகுப்பான இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி 2020ல் வெளியாகியுள்ளது.

பாக்கியராஜ் கோதை

பாக்கியராஜ் கோதை

பிறைநிலா

பிறைநிலா

இயற்பெயர் ஶ்ரீனிவாசபிரபு,. வேதியியல் பொறியாளராக பணியாற்றும் இவர் கவிதையில் ஆர்வம் மிகுதி என தெரிவித்து இருக்கிறார் . இவரின் கவிதைப் படைப்புகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளன.. கவிதைக்காக விருதுகள் சில பெற்றுள்ளார்.

பிரபா அன்பு

பிரபா அன்பு

இலங்கையிலுள்ள யாழ்பாணத்தை சார்ந்த பிரபா அன்பு இதுவரை மூன்று சிறுகதை நூல்கள் ( அணையாத கனவுகள், அலைபாடும் துயரோசை, போர்ப்பறவைகள்)
இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் ( ஆன்மாவின் ஆலாபனை, கரிசல் நிலத்துக்கீறல்கள்) ஆகியவை வெளியிட்டுள்ளார். சமூக சேவையில் நாட்டம் உள்ள இவர் பல பாடல்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கிறார்.

பிரதீபா சிவகுமார்

பிரதீபா சிவகுமார்

இலங்கையில் கொழும்புவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பிரதீபா சிவகுமாரின் கவிதைகள் முகநூலில் பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முதல் கவிதைத் தொகுப்பு " தீராக் காதல் தீராக் காமம்" கடல் பதிப்பக வெளியீடாக அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

கோவை பிரசன்னா

கோவை பிரசன்னா

இரா.கவியரசு

இரா.கவியரசு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையைச் சார்ந்தவர். 2013 முதல் சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது கடம்பத்தூரில் வசிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு "நாளை காணாமல் போகிறவர் ". அந்நூல் திருப்பூர் கனவு இலக்கிய வட்டத்தின் விருது, செங்கனி பதிப்பகத்தின் இரா.தூண்டியாப் பிள்ளை கவிதைக்கான விருது மற்றும் நாமக்கல் தமிழ்ச் சங்கத்தின் விருதையும் பெற்றுள்ளது."மாய சன்னதம் " ( கவிதைகள் குறித்த கட்டுரைகள் ) என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. இணைய மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து கவிதைகள், கவிதைகள் குறித்த கட்டுரைகள் என பங்களிப்பு செய்து வருகிறார்.

ரகுநாத் 

ராகினி முருகேசன்

ராகினி முருகேசன்

ராஜா முகமது

ராஜா முகமது

Rajesh Radhakrishnan

Rajesh Radhakrishnan

விருதுநகரைச் சார்ந்த ராஜேஷ், பொறியியல் பட்டதாரி. தற்போது ஆந்திர பிரதேசத்தில் பணிபுரிகிறார். “கருப்பட்டி மிட்டாய்” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

ராம் வசந்த்

ராம் வசந்த்

ராம் வசந்த்தின் இயற்பெயர் ராமமூர்த்தி. காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் விவசாயக்குடியில் பிறந்தவர், இன்று ஹைதராபாத்தில் ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். இளைஞர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் வணிகத்தில் வெற்றி பெறும் நுட்பங்களையும் வழிமுறைகளைகளையும் ”வணிகத் தலைமை கொள்” எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய தொடர் மிகுந்த கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. இத்தொடர் நூலாகவும் வெளியாகி இருக்கிறது. எளிமையும் நுணுக்கமும் மிக்க கவிதைகள் எழுதக்கூடியவர். இவரின் கவிதைகள் ஆனந்தவிகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி இருக்கிறது.

ராம்போ குமார்

ராம்போ குமார்

மதுரையைச் சார்ந்தவர். குறும்பட இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளார்.

ரம்யா

ரம்யா

ரம்யா திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சார்ந்தவர். "தங்கமங்கை", "தொழில் நண்பன்" மற்றும் "தமிழக மாணவர் வழிகாட்டி" ஆகிய மூன்று இதழ்களில் நிருபராக பணிபுரிகிறார். நேர்காணல்கள், அரசியல் மற்றும் சமூக கட்டுரைகள், திரை விமர்சனங்கள், நூல் விமர்சனங்கள் ஆகியன எழுதி வருகிறார். முகநூலில் எழுதிய "பத்தரக்கார்" என்ற உரைநடை கவிதைதான், முதன்முதலாக அச்சில் வந்த இவர் எழுத்து. அதன் காரணமாக கவிதைகள் எழுதுவதில் தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர்.

தாரிகை

தாரிகை

தாரிகை எனும் பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் ரஞ்சிதா ரவி. பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவர். இளம் வயதிலேயே மாணவ பத்திரிக்கையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர், 6 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார். பெண்ணியம், தலித் அரசியல் மற்றும் தலித் இலக்கியச் சூழலில் இயங்கி வருபவர். சமூகம், அரசியல், உடல்நலம், உறவுகள், பெண்கள் மற்றும் தலித் அரசியல் குறித்தும் எழுதிக் கொண்டிருப்பவர்.

ரத்தினமூர்த்தி

ரத்தினமூர்த்தி

திருப்பூரைச் சார்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், இது வரை கதைகள், நாவல்கள், கவிதைகள் என 9 நூல்கள் வெளியாகி உள்ளது. தளிர் இலக்கிய அமைப்பு மற்றும் பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.

ரேவதி ராம்

ரேவதி ராம்

புதுக்கோட்டையில் ஆசிரியராகப் பணியாற்றும் ரேவதி ராம் இதுவரை பஞ்சுமிட்டாய்க் காலங்கள், மழைக்கண் அம் காதல், கத்தரிப்பூ நிறத்தில் பூக்கும் உயிர், சிற்றலை மீதமர் தும்பி என்னும் கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

ராஜிலா ரிஜ்வான்

ராஜிலா ரிஜ்வான்

ரோஷான் ஏ.ஜிப்ரி

ரோஷான் ஏ.ஜிப்ரி

க.சு.சபரி நாதன்

க.சு.சபரி நாதன்

சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம்

க. சம்பத்குமார்

க. சம்பத்குமார்

அவிநாசியைச் சார்ந்த இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியரக பணியாற்றுகிறார். கவிதைகள் வழி உணர்ந்த வாழ்வை கவிதைகளாகச் சொல்ல விரும்பும் மனம். சமூகம் சார்ந்து செயல்பட ஆர்வமுள்ளவர். இவரின் முதல் கவிதை நூல் "பறவையின் சிறகொன்றைப் பரிசளிக்கும் காற்று" (2022) .

தம்பிலுவில் சஞ்ஜிகா

தம்பிலுவில் சஞ்ஜிகா

சந்தோசு ஏழுமலை

சந்தோசு ஏழுமலை

இவரின் கவிதைகள் உயிர்மை மற்றும் உதரி இதழ்களில் வெளியாகி உள்ளது.

கருணா

சரஸ் வேல்

சரஸ் வேல்

சிங்கையில் வசிக்கும் சரஸ்வேல் 2018 -ஆம் ஆண்டிலிருந்து சிங்கையிலுள்ள கவிதை அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருவதாக தெரிவிக்கும் இவரின் கவிதைகள் சிங்கையின் தமிழ் முரசு, மக்கள் மனம், மின்கிறுக்கல் மின்னிதழ், மற்றும் கவிமாலையின் ஆண்டுத் தொகுப்பிலும், தமிழ் நாட்டில் வளரி மாத இதழிலும் வெளியாகி இருக்கின்றன.

சசிகலா திருமால்

சசிகலா திருமால்

பெரணமல்லூர் சேகரன்

ஷக்தி

ஷக்தி

தஞ்சை மாவட்டம் திருத்துறைப் பூண்டியைச் சார்ந்த கவிஞர் சக்தி யுவபுரஸ்கார்-2020-க்கான விருதை ‘மரநாய்’ கவிதைத் தொகுப்புக்காக பெற்றவர். இவரின் ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’ கவிதைத் தொகுப்பும், ‘கொண்டல்’ நாவலும் வெளிவந்திருக்கின்றன.

க.ஷியா

க.ஷியா

க. ஷியா எனும் புனைப் பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் க. சிபானா. இலங்கையை சார்ந்தவர். கடந்த இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு இலங்கையின் மிகவும் பிரபலமான புத்தக நிறுவனமான கொடகே நிறுவனத்தினால் இவரின் "வலித்திடினும் சலிக்கவில்லை" எனும் கவிதைத் தொகுதி வெளியாகி கொடகே தேசிய சாகித்ய விருதும் பெற்றது. அத்தோடு கவிநிலா, கவிமலர், கலைஞர் சுவதம் 2021 உட்பட பத்து விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

சிபி சரவணன்

சிபி சரவணன்

திரைப்படத் துறையில் உதவி இயக்குநர்

கூவத்துக்காரி

கூவத்துக்காரி

நெல்லை. க.சோமசுந்தரி.

நெல்லை. க.சோமசுந்தரி.

நெல்லையைச் சேர்ந்த தனியார் துறையில் வேதியியல் பாடநூல் வல்லுநராக (SME) பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். தமிழில் பேச்சரங்கம், ஆய்வரங்கம், கவிதைகள் எழுதுதல், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், பட்டிமன்ற பேச்சு, நேர்காணல், ஆன்மீக சொற்பொழிவு மற்றும் நிகழ்ச்சித் தொகுப்புகள் என பல செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

சங்க இலக்கியத்தில் மனிதநேயம்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை பெற்றுள்ளார். தொல்லியல், வரலாற்று ஆய்வியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் உள்ள இவரின் ஹைக்கூ, லிமரைக்கூ சென்ரியு, ஹைபுன், தன்முனை மற்றும் புதுக் கவிதைகள், கட்டுரைகள் ஆகியன நாளிதழ்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு இலக்கிய இதழ்களில் வெளி வந்துள்ளன. கவிதைகளுக்காக பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

செளவி

செளவி

செளம்யா .

கே.ஸ்டாலின்

கே.ஸ்டாலின்

ஸ்டெல்லா தமிழரசி. ர

ஸ்டெல்லா தமிழரசி. ர

சுபா .

சுபா .

தேர்ந்த இலக்கிய வாசிப்பாளரான சுபா இலங்கையை சார்ந்தவர். பணி நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கிறார்.

இல. சுபத்ரா

இல. சுபத்ரா

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இல. சுபத்ரா; திருப்பூரில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

அமிதபா பக்சியின் 'பாதி இரவு கடந்துவிட்டது' நாவல் மொழிபெயர்ப்பு, 'அது உனது ரகசியம் மட்டுமல்ல' சிறுகதைகள் தொகுப்பு மொழிபெயர்ப்பு மற்றும் அனா பர்னஸ்ஸின் ‘ஆயன்’ நாவல் மொழிபெயர்ப்பு என மூன்று நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளன. . பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.

சுபா செந்தில்குமார்

சுபா செந்தில்குமார்

கவிஞர், தொழில்முனைவர். இன்போனிடிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்.
மாணவர்களுக்கான கலை, மொழி, பண்பாடு சார்ந்த பயிலரங்குகளுக்கான பயிற்றுவிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
கடலெனும் வசீகர மீன்தொட்டி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்.

சுபஸ்ரீ முரளிதரன்

சுபஸ்ரீ முரளிதரன்

சுப்ரபாரதி மணியன்

சுப்ரபாரதி மணியன்

சுப்ரபாரதிமணியன் (25 அக்டோபர் 1955) திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் பல வருடங்களாக எழுதி வருபவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்திவருபவர். தொலைப் பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சுடர்நிலா .

சுடர்நிலா .

இலங்கை முல்லைத்தீவைச் சார்ந்தவர் சுடர்நிலா. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை இறுதி ஆண்டு பயிலுகிறார்.

சுப. முத்துக்குமார்

சுப. முத்துக்குமார்

திண்டுக்கல்லைச் சார்ந்த சுப.முத்துக்குமார் தற்போது கோயம்புத்தூரில் வசிக்கிறார். வேதியலில் முதுஅறிவியல் மற்றும் விளம்பரத் துறையில் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து வருகிறார். இரண்டு திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். "பாரம்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். இவரின் கவிதைகள் மணல்வீடு, கல்கி, குங்குமம் மற்றும் நடுகல் போன்ற இதழ்களில வெளியாகி இருக்கின்றன.

சுஷ்மா

மதுரையை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது தேனிக்கு அருகில் போடிநாயக்கனூரில் . பொறியியல் பட்டப்படிப்பு பெற்ற இவரது கவிதைகள் வாசகசாலை இணைய இதழ் , துண்டுசீட்டு மின்னதழ் உள்ளிட்டவைகளில் வெளியாகி உள்ளன. பெண்களின் குரல் என்னும் மாத இதழில் கவிதை மற்றும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

சுசித்ரா மாரன்

சுசித்ரா மாரன்

தமிழ் மணி

தமிழ் மணி

தமிழினியாள்

தமிழினியாள்

தஞ்சையில் பிறந்தவர். பேராசிரியராக பணி புரிகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு"புதிய இசைக்குறிப்பு"
”நீலமலர் ” என்ற நாவல் வெளிவர இருக்கும் அடுத்த படைப்பு.

தயாஜி

தயாஜி

மலேசியா நாட்டைச் சார்ந்த தயாஜி, முன்னாள் (மலேசிய) அரசாங்க வானொலி அறிவிப்பாளர்.  புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை எனும் இணைய புத்தக அங்காடியை நிறுவி நடத்தி வருகிறார். இதுவரையில் ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ என்ற பத்திகள் தொகுப்பும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’,'குறுங்கதை எழுதுவது எப்படி ? - 108 குறுங்கதைகள்' தொகுப்பும் ,‘பொம்மி’ கவிதைகள் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ எனும் பதிப்பகத்தையும்  தொடங்கியிருக்கிறார். குறுங்கதை பயிற்றுனராகவும் செயல்படும் இவர், மலேசிய தொலைக்காட்சி வானொலி படைப்புகளுக்கு எழுத்தாளராகவும் இருக்கிறார்.

தாடிக்காரன்

தமிழவன் .

தமிழவன் .

தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழும் தமிழவன் சிறுகதைகள்- புதின எழுத்தாளர், விமர்சகர் மற்றும் திறனாய்வாளர்

இவரின் இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார்.

தபசி

தபசி

தபசியின் இயற்பெயர் சங்கர். திருக்கோயிலூரில் பிறந்த இவர் தற்போது திருச்சியில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் தபசி; மத்திய கலால் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். இவரது சில கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தேன்மொழி தாஸ்

தேன்மொழி தாஸ்

1976 இல் மேற்குத் தொடர்ச்சி மலையில் மணலாறு என்னும் தேயிலைத் தோட்டப் பகுதியில் தேன்மொழி தாஸின் இயற்பெயர் சுதா. 1996-களில் எழுதத் தொடங்கியவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதியான இசையில்லாத இலையில்லை (2001) தேவமகள் அறக்கட்டளை விருது, சிற்பி இலக்கிய விருது, திருப்பூர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது கவித்தூவி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளது. அநாதி காலம் (2003), ஒளியறியாக் காட்டுக்குள் (2007) , நிராசைகளின் ஆதித்தாய் (2016) , காயா (2017 ) வல்லபி (2019) ஆகியவை இவருடைய பிற கவிதைத் தொகுப்புகளாகும் . இவர் ஒரு சிறுகதையாசிரியரும்கூட. ஈரநிலம் என்னும் திரைப்படத்தில் பாடல்களும் உரையாடலும் எழுதி, உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். உரை நடை ஆசிரியராகவும் , பாடலாசிரியராகவும் இணை இயக்குநராகவும் தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறார் .இவர் உரையாடல் எழுதிய முதல் திரைப்படமான ஈரநிலம் என்ற திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதினை 2003 ஆம் ஆண்டு வழங்கியது ,

தேன்மொழி சதாசிவம்

தேன்மொழி சதாசிவம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த தேன்மொழி சதாசிவம் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

கமலாதாஸின் The Old Play house and Other poems என்ற கவிதைத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மு. மேத்தாவின் "நடந்த நாடகங்கள்" கவிதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு " என் பெயர் தேன்மொழி" என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

வீரசோழன் க.சோ.திருமாவளவன்

வீரசோழன் க.சோ.திருமாவளவன்

தென்காசி மாவட்டம் அருகன்குளம் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்டவர் வீரசோழன் க சோ.திருமாவளவன். இன்றைய இலக்கிய உலகிலும் பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மொரீசியஸ் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வையாபுரி பரமசிவம் பிள்ளை அவரிடமிருந்து தனது கவிதைக்காக முதல் பரிசு பெற்றுள்ளார்.

“ இவரின் கவிதைத் தொகுப்பு நூல்கள் “பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை” மற்றும் "புத்தனை புனைபெயர் ஆந்தை"

ஞா.தியாகராஜன்

ஞா.தியாகராஜன்

ஞா.தியாகராஜன் மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். மணல்வீடு வெளியீடாக 'போகூழ்' என்னும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிற்றிதழ்களில் கவிதைகளும், படைப்பாக்கங்கள் குறித்த விமர்சனங்களும் எழுதி வருகிறார்.

உமா மஹேஸ்வரி பால்ராஜ்

குமரி உத்ரா

குமரி உத்ரா

உமா மகேஸ்வரி எனும் இயற்பெயர் உடைய குமரி உத்ரா பல்வேறு அச்சு இணைய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வருகிறார். வானொலிகளில் கவிதை, கதை சார்ந்த படைப்புகளை வாசித்து இருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளிலிருந்து விருதுகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார்.

வேணி வெயிலு

வேணி வெயிலு

தாமிரபரணியின் தென்கரையில் பிறந்தவர். சென்னையில் உள்ள தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து வருகிறார். தீவிர வாசிப்பு பழக்கம் கொண்டவரான இவரின் கவிதைகள் "அரும்பு" மாத இதழ்களில் வெளியாகி உள்ளது.

கா. வெங்கடேஸ்வரன் .

கா. வெங்கடேஸ்வரன் .

,
வேலூர் மாவட்டம் - குடியாத்தம் நகராட்சியைச் சார்ந்த இவர்புகைப்படக்கலைஞராக தொழில் செய்கிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ”சொல்விழுங்கும் பறவை” 2022 இல் வெளியானது. படைப்பு குழுமத்தின் விருது உட்பட சில விருதுகளை கவிதைகளுக்காக பெற்றிருக்கிறார்.

விஜய் மகேந்திரன்

விஜய் மகேந்திரன்

எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர்.

வினையன் .

வினையன் .

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்தவர். கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சென்னையில் பத்திரிகை துறையில் பணியாற்றுகிறார். எறவானம், எச்சிக்கொள்ளி எனும் இரண்டு கவிதை நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்ற இவர், இழப்பின் வலி சுமந்து நிற்கும் மக்களின் வாழ்க்கையைப் பிரதியெடுக்கும் படைப்புகளை எழுதி வருகிறார். தனது வலைத்தளத்தில் 'தெவசம்' எனத் தலைப்பிட்டு தொடர் எழுதி வருகிறார்.

வினோத் பரமானந்தன்

வினோத் பரமானந்தன்

தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த வினோத் பரமானந்தன் 21 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதுவரை இரண்டு கவிதைத்தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கும் இவர் பல கவியரங்கங்கள்மற்றும் பட்டிமன்றங்களில் பங்கேற்றிருக்கிறார். ராணுவம் குறித்தான இவர் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்தி அனுப்பிய குரல் பதிவை பொக்கிஷமென பெருமிதத்தோடு குறிப்பிடும் வினோத் பரமானந்தன் விரைவில் மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட இருப்பதாக தெரிவிக்கிறார்.

யாழிசை மணிவண்ணன்

யாழிசை மணிவண்ணன்

இயற்பெயர் மணிவண்ணன். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பிள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் மற்றும் நூல் விமர்சனங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். பணி நிமித்தம் தற்பொழுது சிங்கப்பூரில் வசிக்கிறார். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளது .

யாழினி ஸ்ரீ

யாழினி ஸ்ரீ

கோத்தகிரியில் பிறந்த யாழினிஸ்ரீயின் இயற்பெயர் யோகேஷ்வரி; தற்போது மேட்டுப்பாளையம் அருகிலிருக்கும் தென் திருப்பதியில் வசிக்கிறார். தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெற்ற யாழினிஸ்ரீ தன் அயராத முயற்சியில் கவிதைகள் எழுத பழகிக்கொண்டவர்.
”எனது கவிதை உலகம் இந்த பிரபஞ்சம்தான். இந்த பிரபஞ்சத்தில் இருந்த, இருக்கும், இருக்கபோகும் அனைத்தும் என் எழுத்துகளுக்கானதே... உடலுக்குதான் நோய்மையே தவிர என் சிந்தனைகள் ஆரோக்கியமானது. அதை முடக்கிவிடமாட்டேன். கை வலித்தாலும் எழுதிவிடுவேன். அல்லது தட்டச்சு செய்வேன்.” என ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்; Oct 22- 2019)

திருப்பூரில் உள்ள பொன்னுலகம் பதிப்பகம் மூலமாக 2019ல் யாழினிஸ்ரீயின் கவிதைகள் தொகுக்கப்பட்டு ”மரப்பாச்சியின் கனவுகள்” கவிதைத் தொகுப்பை கவிஞர் குட்டிரேவதி வெளியிட்டார். அதனை தொடர்ந்து வெளிச்சப்பூ, தீண்டாக்கனி, ஐஸ்க்ரீம் அருவி ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியானது. யாழினிஸ்ரீயின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு நூல் “எழுத்துமி” அக்டோபர் 8-2023 அன்று வெளியானது.

ஜீனத்

ஜீனத்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஜீனத் (முழுப்பெயர் ஜீனத் நஸிபா) தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இலக்கிய வாசிப்பைத் தேர்ந்துகொண்டவர். இவரது தந்தையார் மூலமாக புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் நுழைந்தார் எனவும், பாரதியின் கவிதைகளின் தாக்கத்தால் கவிதைகள் எழுதத் தொடங்கினார் எனவும் தெரிவிக்கும் ஜீனத் முதுகலை ஆங்கில இலக்கியமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர்.

ஆங்கில இலக்கியம் படித்திருந்தாலும் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றுதலின் காரணத்தால் தமிழ்க் கவிதை உலகிற்குள் நுழைந்தார். 2013ஆம் ஆண்டு முதல் நவீன கவிதைகள் எழுதி வரும் இவரின் முதல் கவிதை " திரும்பிய சர்ப்பம்" "கீற்று.காம்" மின்னதழில் வெளியானது. அதன் பின்னர் "கல்குதிரை" "சிலேட்" "காலச்சுவடு" "பேசும் புதிய சக்தி" "சிறுபத்திரிக்கை" "கல்கி" எனப் பல்வேறு சிறுபத்திரிக்கைகளிலும், வெகுஜன இதழ்களிலும் தொடர்ந்து கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.

மத ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல், மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு, போன்றவை என் கவிதைகளில் காணப்பட்டபோதும், பெண்களின் வாழ்வியல், பெண்களுக்கெதிரான அநீதிகள், சமூக ஒடுக்குமுறைகள், பாலியல் சுரண்டல்கள் போன்றவை முதன்மையானவையாக இருக்கும்.

இக்காரணிகளால் தனக்குள் ஏற்படும் மற்றும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பகிரப்படாத வலிகளின், சோகங்களின் இருண்மையை இக்கவிதைகள் பேசுவதால் "அறிந்திடாத இரவு" என்கிற தலைப்பு என் தொகுப்பிற்கு பொருத்தமானதக இருந்தது" என்று கூறும் கவிஞர் ஜீனத் தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார்.

கணவர் முகமது ஷஃபியுல்லா ஆவடி மாநகராட்சியில் கண்காணிப்புப் பொறியாளராக உள்ளார். "அறிந்திடாத இரவு" என்கிற இவரது கவிதைத் தொகுப்பு ஒன்று 2020 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூலுக்கு 2021ஆம் ஆண்டிற்கான "திருப்பூர் இலக்கிய விருது" கிடைத்துள்ளது.
இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தன்று 2023 - " மகா திறன் மங்கை விருது வழங்கியுள்ளது.

You cannot copy content of this Website